Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

விழுந்து..வாரியபடி பவுண்டரி அடித்த சின்ன தல ரெய்னா… இது வேற லெவல் ஷாட்.. வைரலான வீடியோ

சென்னை:டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் விழுந்தடித்து பவுண்டரி அடித்த ரெய்னாவின் அந்த ஷாட் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஐபிஎல் டி20 லீக்கின் 50 வது போட்டி இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. அதில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின.

ஏற்கனவே இரு அணிகளும் ப்ளே ஆப் செல்லும் வாய்ப்பை பெற்றுள்ளது. மேலும் இந்த ஐபிஎல் சீசனின் சென்னையில் நடைபெறும் கடைசி போட்டி என்பதால் ரசிகர்களிடையே தோனி விளையாடுவரா என்ற சந்தேகம் நிலவியது.

முதலில் பவுலிங்

முதலில் பவுலிங்

முதுவலியால் 2 போட்டிகளில் விளையாடாத சென்னை அணியின் கேப்டன் தோனி மீண்டும் அணிக்கு திரும்பியதை ரசிகர்கள் கொண்டாடினர். அதை தொடர்ந்து, போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் முதலில் பந்து வீச்சை தேர்ந்தெடுத்தார்.

வாட்சன் அவுட்

வாட்சன் அவுட்

அதன்படி பேட்டிங் செய்ய சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்கான டு பிளிஸிஸ் மற்றும் வாட்சன் களமிறங்கினர். வாட்சன் ரன் ஏதும் எடுக்காமல் அவுட்டாகி அதிர்ச்சியளித்தார்.

நிதான ஆட்டம்

நிதான ஆட்டம்

இதனை அடுத்து ஜோடி சேர்ந்த சுரேஷ் ரெய்னா மற்றும் டு பிளிசிஸ் கூட்டணி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. சின்ன தல ரெய்னா 59 ரன்களும், டு பிளிஸிஸ் 39 ரன்களும் எடுத்து அவுட்டாகினர்.

பவுண்டரி வீடியோ

பவுண்டரி வீடியோ

அந்த போட்டியில் ரெய்னா பேட்டிங்கின் செய்யும் போது விழுந்தடித்து பவுண்டரி அடித்த காட்சிகள் கொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 6வது ஓவரை அக்சர் படேல் வீசுகிறார். அது அந்த ஓவரின் 4வது பந்து.

வைரல்

வந்த அந்த பந்தை மடக்கியடிக்க, நேராக பவுண்டரிக்கு பறக்கிறது. அந்த பந்தை அடித்த போது லேசாக ஸ்லிப்பான சின்னதல ரெய்னா.. பின்னர் சரிவாக சாயந்து, விழுந்து எழுகிறார். இந்த காட்சிகள் கொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகி இருக்கிறது.

Story first published: Wednesday, May 1, 2019, 23:48 [IST]
Other articles published on May 1, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+