Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சுரேஷ் ரெய்னா குடும்பத்தில் பெரும் இழப்பு.. அவசர அவசரமாக கிளம்பும் எம்.எஸ்.தோனி?.. ரசிகர்கள் சோகம்!

காசியாபாத்: இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னாவின் குடும்பத்தில் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளதால் ரசிகர்கள் ஆறுதல் கூறி வருகின்றனர்.

இந்திய அணியில் 3 வடிவ கிரிக்கெட்டிலும் சதமடித்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்றவர் சுரேஷ் ரெய்னா.

முன்னணி ஆல்ரவுண்டராக திகழ்ந்த ரெய்னா கடந்த 2020ம் ஆண்டு சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார்.

 பெரும் இழப்பு

பெரும் இழப்பு

ஐபிஎல் தொடர் ஏதும் இல்லாத காரணத்தால் ரெய்னா தற்போது சொந்த ஊரில் தனது குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட்டு வருகிறார். இந்நிலையில் ரெய்னாவுக்கு மிகவும் பிடித்த அவரின் தந்தை ட்ரிலோக்சந்த் ரெய்னா இன்று காலை காலமானார். புற்று நோயால் நீண்ட வருடங்களாக அவதிப்பட்டு வந்த அவர் காசியாபாத்தில் உள்ள தனது சொந்த வீட்டில் இன்று இயற்கை எய்தினார்.

சோக கதை

சோக கதை

ரெய்னாவின் தந்தை முன்னாள் ராணுவ அதிகாரி ஆவார். இந்திய ராணுவத்தில் வெடிகுண்டு தயாரிக்கும் நிபுணராக பணிபுரிந்துள்ளார். ஜம்மு காஷ்மீரை பூர்விகமாக கொண்ட ரெய்னாவின் குடும்பத்தார், அங்கு 1999ம் ஆண்டு நடந்த மோசமான தாக்குதல் காரணமாக உத்திரப்பிரதேசத்திற்கு குடிபெயர்ந்தனர். எனவே அந்த சம்பவத்தை மட்டும் நினைவுப்படுத்தக்கூடாது என்பதில் ரெய்னா தெளிவாக இருப்பார்.

இரங்கல்

இரங்கல்

தனது தந்தை குறித்து பல இடங்களில் சுரேஷ் ரெய்னா உருக்கமாக பேசியுள்ளார். அவரின் கடைசி நாட்களில் உடனிருந்து பார்த்துக் கொண்டுள்ளார். இதனையடுத்து ரெய்னாவுக்கு கிரிக்கெட் உலகை சேர்ந்த பலரும் ஆறுதல் கூறி வருகின்றனர். சமூக வலைதளங்கள் மூலமாக ரசிகர்களும் ஆறுதல் கூறிவருகின்றனர்.

நேரில் செல்லும் தோனி

நேரில் செல்லும் தோனி

சுரேஷ் ரெய்னாவின் நெருங்கிய நண்பரும், சிஎஸ்கே அணியின் கேப்டனுமான எம்.எஸ்.தோனி இரங்கல் தெரிவிப்பதற்காக தற்போது காசியாபாத் விரைந்து செல்லவுள்ளதாக தெரிகிறது. ஏற்கனவே தொலைப்பேசி மூலம் ரெய்னாவுடன் தோனி பேசியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Story first published: Sunday, February 6, 2022, 23:58 [IST]
Other articles published on Feb 6, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+