பெங்களூர்: சுரேஷ் ரெய்னா விளாசிய சிக்சர்கள் ரசிகர்களுக்கு வேண்டுமானால் குஷி கொடுத்திருக்ககலாம். ஆனால் பெங்களூர் சின்னசாமி ஸ்டேடியத்தில் உட்கார்ந்திருந்த 6 வயது சிறுவன் தொடையை அவர் அடித்த பந்து பதம் பார்த்துவிட்டது.
இங்கிலாந்துக்கு எதிரான 3வது டி20 போட்டியில்தான் இந்த விபரீதம் நடைபெற்றது. அதிரடியாக ஆடிய ரெய்னா சிக்சர் மழை பொழிந்தார். அதில் ஒரு சிக்சர் பார்வையாளர் மாடத்தில் அமர்ந்திருந்த சதீஷ் என்ற 6 வயது சிறுவனின், இடது தொடை மீது விழுந்தது.

இதனால் சிறுவனுக்கு வலி ஏற்பட்டது. ஸ்டேடியத்திலுள்ள மருத்துவ குழுவிடம் சிகிச்சை பெற்றுக்கொண்ட சிறுவன், ஆட்டத்தை தொடர்ந்து பார்வையிட்டார்.