Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தோனி தான் எனக்கு ஃபர்ஸ்ட்.. அப்புறம் தான் நாடு.. சின்ன தல சுரேஷ் ரெய்னாவின் நெகிழ்ச்சி பேச்சு

மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரராக விளங்கிய சுரேஷ் ரெய்னா, தோனி ஓய்வு பெற்ற அதே நாளில் தங்களுடைய ஓய்வு முடிவையும் அறிவித்தார்.

இந்திய கிரிக்கெட் அணியின் ராமன் லக்ஷ்மன் போல் எப்போதும் இணைந்தே சுரேஷ் ரெய்னாவும் மகேந்திர சிங் தோனியும் இருந்தனர்.

சிஎஸ்கே அணிக்காக இருவரும் ஒன்றாக விளையாடியதிலிருந்து இணைபிரியாமல் இருந்தார்கள்.

ஒரே நாளில் ஓய்வு

ஒரே நாளில் ஓய்வு

டெஸ்ட் போட்டியில் இருந்து தோனி ஓய்வு பெற்ற போது தன்னையே அறியாமல் கண்ணீர் சிந்தினார் ரெய்னா. இதேபோன்று தோனி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விலகியவுடன் இனி நானும் இந்திய அணிக்காக விளையாட மாட்டேன் என்று பெட்டியை கட்டினார் சுரேஷ் ரெய்னா.எனினும் 2020 ஐ.பி.எல் சீசன் தொடரில் சி எஸ் கே அணியில் இருந்து பாதியில் விலகினார்.

விரிசல்

விரிசல்

இதனை தொடர்ந்து 2021 ஆம் ஆண்டு சீசனில் ரெய்னா சிஎஸ்கே அணியில் இடம் பெற்றாலும், அதற்கு போதிய பார்மில் இல்லை என்று அதிரடியாக நீக்கப்பட்டார்.

இதனால் சுரேஷ் ரெய்னாவுக்கும் தோனிக்கும் விரிசல் ஏற்பட்டதாக கருதப்பட்டது. இந்த நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சுரேஷ் ரெய்னா நாங்கள் இருவரும் நிறைய போட்டிகளில் ஒன்றாக இணைந்து விளையாடி இருக்கிறோம்.

தோனிக்காக விளையாடினேன்

தோனிக்காக விளையாடினேன்

இந்திய அணிக்காக தோனியுடன் சேர்ந்து விளையாடியதை நினைத்து நான் அதிர்ஷ்டமாக கருதுகிறேன். எங்கள் இருவருக்கும் நல்ல ஒரு நட்பு இருந்தது. நான் காசிதாபாத்தில் இருந்து வந்தேன். டோனி ராஞ்சியிலிருந்து வந்தார். உண்மையை சொல்ல வேண்டுமென்றால் நான் தோனிக்காக தான் முதலில் விளையாடினேன்.

நல்ல மனிதர்

நல்ல மனிதர்

பிறகுதான் நான் எனது நாட்டுக்காக விளையாடினேன். தோனி ஒரு சிறந்த தலைவர் மற்றும் நல்ல மனிதரும் கூட. நாங்கள் இருவரும் இணைந்து பல இறுதிப் போட்டிகளிலும் உலகக்கோப்பையும் வென்று இருக்கிறோம் .இதனால் தான் தோனி விலகியவுடன் தாமும் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றேன் என்று சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.

Story first published: Sunday, February 5, 2023, 22:30 [IST]
Other articles published on Feb 5, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+