Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மார்க் மை வேர்ட்ஸ்.. ஐபிஎல் ஏலத்தில் 23 வயது வீரருக்காக குரல் கொடுத்த ரெய்னா.. அப்படி என்ன ஸ்பெஷல்!

மும்பை: ஐபிஎல் ஏலத்தின் போது அதிகம் கவனம் பெறப்போகும் வீரர்கள் குறித்து சிஎஸ்கே முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா கூறியுள்ளார்.

ஐபிஎல் 16வது சீசன் தொடருக்கான மினி ஏலம் வரும் டிசம்பர் 23ம் தேதியன்று கொச்சியில் நடைபெறவுள்ளது. இதற்காக பிசிசிஐ தனது கடைசி கட்ட பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

மொத்தமுள்ள 10 அணிகளும் தங்களது தக்கவைப்பு பட்டியலை வெளியிட்ட பிறகு, 87 இடங்கள் காலியாக உள்ளன. அதற்கான வீரர்கள் தேர்வு தான் நடைபெறவுள்ளது. இதில் 30 இடங்கள் அயல்நாட்டு வீரர்களுடையது ஆகும்.

ஐபிஎல் ஏலம் விவரம்

ஐபிஎல் ஏலம் விவரம்

இந்த 87 இடங்களில் ஏதேனும் ஒரு இடத்தை பிடிப்பதற்காக உலகம் முழுவதும் இருந்து 991 வீரர்கள் தங்களது பெயர்களை பதிவு செய்துள்ளனர். இதில் 405 வீரர்களை ஏலத்திற்காக இறுதி செய்துள்ளது பிசிசிஐ. அணிகளின் கோரிக்கைக்கு ஏற்ப சில வீரர்களும் ஏலத்தின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதனால் எந்தெந்த அணிகள், யாரை வாங்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

ரெய்னாவின் கணிப்பு

ரெய்னாவின் கணிப்பு

இந்நிலையில் ஐபிஎல் சூப்பர் ஸ்டாரான சுரேஷ் ரெய்னா முக்கிய தகவலை கொடுத்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், ஏலத்தில் பல வீரர்கள் இருந்தாலும் அயர்லாந்தின் இளம் வீரர் ஜோஸுவா லிட்டில் தனி கவனத்தை பெறவுள்ளார். சமீபத்தில் நடந்த உலகக்கோப்பையில் அவரின் ஆட்டம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அவருடன் நான் இணைந்தும் விளையாடியுள்ளேன் என்பதால் கூறுகிறேன் நிச்சயம் கவனம் பெறுவார் என ரெய்னா கூறியுள்ளார்.

என்ன ஸ்பெஷல்

என்ன ஸ்பெஷல்

வெறும் 23 வயதே ஆகும் ஜோஸுவா லிட்டில், இடதுகை வேகப்பந்துவீச்சாளர் ஆகும். 2022ம் ஆண்டு சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட்களை எடுத்தவர்கள் பட்டியலில் 2வது இடத்தில் இருக்கிறார். இந்தாண்டில் மட்டும் 26 போட்டிகளில் ஆடி 39 விக்கெட்களை கைப்பற்றி அசத்தியுள்ளார். அவரின் எகானமி ரேட் 7.59 ரன்கள் மட்டுமே ஆகும். இன்னும் சுவாரஸ்யமாக சொல்ல வேண்டும் என்றால் நியூசிலாந்து அணியையே டி20 உலகக்கோப்பையில் ஆட்டம் காண வைத்தார்.

சுவாரஸ்ய தகவல்

சுவாரஸ்ய தகவல்

சமீபத்தில் நடந்த டி20 உலகக்கோப்பை தொடரில் நியூசிலாந்து அணிக்கு எதிராக அடுத்தடுத்து 3 விக்கெட்களை எடுத்து ஹாட்ரிக் படைத்தார். டி20 உலகக்கோப்பை வரலாற்றில் அயர்லாந்து அணிக்காக ஹாட்ரிக் விக்கெட்களை எடுத்த 2வது வீரர் இந்த 23 வயது புயல் தான். இவரும் சுரேஷ் ரெய்னாவும் அபுதாபி டி10 லீக் தொடரில் ஒரே அணிக்காக விளையாடியதால், அவரின் திறமை குறித்து ரெய்னா நன்கு அறிந்துவைத்துள்ளார்.

Story first published: Wednesday, December 21, 2022, 14:28 [IST]
Other articles published on Dec 21, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+