Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

எனக்கு டெஸ்ட் போட்டிகளில் இன்னொரு வாய்ப்பு தர வேண்டும்.. ரெய்னா கோரிக்கை

டெல்லி: எனக்கு போதிய அளவில் டெஸ்ட் போட்டிகளில் விளையாட வாய்ப்பு அளிக்கப்படவில்லை. எனக்கு மீண்டும் ஒரு சான்ஸ் தர வேண்டும். அதில் நான் சோபிக்காவிட்டால் அணியிலிருந்து என்னை நீக்கிக் கொள்ளட்டும் என்று சுரேஷ் ரெய்னா கூறியுள்ளார்.

2010ம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் அறிமுகம் ஆனார் ரெய்னா. முதல் போட்டியிலேயே சதம் அடித்தார். அதன் பின்னர் அவர் மொத்தமே 18 டெஸ்ட் போட்டிகளில் தான் இதுவரை ஆடியுள்ளார்.

1000 ரன்களைக் கூட இதுவரை அவர் சேகரிக்கவில்லை. இந்த நிலையில் இலங்கையுடனான டெஸ்ட் தொடரில் இந்திய அணியில் ரெய்னா சேர்க்கப்படவில்லை. இதுகுறித்து அவர் அதிருப்தி வெளியிட்டுள்ளார். தனக்குப் போதிய வாய்ப்புகள் தரவில்லை என்று கூறியுள்ள ரெய்னா, இன்னொரு வாய்ப்பு தர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் ஒரு நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டி...

போதிய வாய்ப்பு தரவில்லை

போதிய வாய்ப்பு தரவில்லை

என்னைப் போன்ற வீரர்களுக்கு எனது திறமையை நிரூபிக்க போதிய டெஸ்ட் வாய்ப்புகள் தர வேண்டும். ஆனால் எனக்கு அது போல தரப்படவில்லை.

ஒரு போட்டியை வைத்து கணக்கிடலாமா

ஒரு போட்டியை வைத்து கணக்கிடலாமா

ஒரே ஒரு போட்டியை மட்டும் வைத்து ஒரு வீரரின் திறமையைக் கணக்கிடக் கூடாது. மேலும் ஒரு நாள், டுவென்டி 20 தொடர்களை விளையாடிய கையோடு டெஸ்ட் போட்டியில் ஆடும் வீரரின் ஆட்டத்தில் நிச்சயம் தேக்கம் இருக்கத்தான் செய்யும்.

நான் 5 போட்டியா கேட்கிறேன்.. 2 இல்லாட்டி 3

நான் 5 போட்டியா கேட்கிறேன்.. 2 இல்லாட்டி 3

நான் 5 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாட வாய்ப்பு கேட்கவில்லை. 2 அல்லது 3 போட்டிகளிலாவது விளையாட வாய்ப்பளியுங்கள் என்றுதான் கேட்கிறேன். நன்றாக விளையாடவிட்டால் பிறகு நீக்கிக் கொள்ளுங்கள்.

விளையாடவில்லைதான்.. ஆனால்

விளையாடவில்லைதான்.. ஆனால்

2012 தொடரில் நான் சரியாக விளையாடவில்லைதான். 2015லும் கூட நான் சரியாகவ விளையாடவில்லைதான். அதனால் என்ன.. எனக்கு இன்னொரு வாய்ப்பு தரலாமே. டெஸ்ட் அணியில் விளையாட எனக்கு அனுபவம் இல்லையா என்ன.. என்று கேட்டுள்ளார் ரெய்னா.

என்ன செய்வது ரெய்னா... தேர்வாளர் குழுவில் உங்களுக்கு ஆதரவாக "விசில்" போட யாருமே இல்லாமப் போய்ட்டாங்களே!

Story first published: Thursday, July 30, 2015, 16:18 [IST]
Other articles published on Jul 30, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+