சுரேஷ் ரெய்னாவுக்கு ஏன் டி20 அணியில் இடம் இல்லை.. எனக்கு இப்பவே தெரிஞ்சாகணும்!!
மும்பை : நியூசிலாந்து தொடரில் ஆடவுள்ள இந்திய டி20 அணி நேற்று அறிவிக்கப்பட்டது. அந்த அணியில் சுரேஷ் ரெய்னா பெயர் இடம் பெறவில்லை.
சுரேஷ் ரெய்னா கடைசியாக இங்கிலாந்து டி20 தொடரில் ஆடினார். ஆனால், அதில் பெரிய அளவில் ரன் குவிக்கவில்லை என்பதால் பின்னர் வாய்ப்பை இழந்தார். ஆனால், ரசிகர்கள் அவரை மறக்கவில்லை. அவரை மீண்டும் டி20 அணியில் சேர்க்க வேண்டும் என குரல் கொடுத்து வருகின்றனர்.

அம்பதி ராயுடு கொடுத்த வாய்ப்பு
இந்த ஆண்டு நடந்த இங்கிலாந்து தொடருக்கு முன் அம்பதி ராயுடு யோ-யோ தேர்வில் தோல்வி அடைந்தார். அதனால், வாய்ப்பு பெற்று இந்திய ஒருநாள் அணியில் நீண்ட காலத்துக்கு பின் வாய்ப்பு பெற்றார் ரெய்னா. டி20 அணியில் தொடர்ந்து இடம் பெற்று வந்தார். கூடவே, ஒருநாள் வாய்ப்பும் கிடைக்கவே, ரெய்னா மீண்டும் கலக்குவார் என எதிர்பார்க்கப்பட்டது.

இங்கிலாந்து செயல்பாடு
அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து டி20 தொடரில் 3 போட்டிகளில் ஒரு அரைசதம் அடித்து, 106 ரன்கள் எடுத்து இருந்தார். 2 ஒருநாள் போட்டிகளில் பேட்டிங் செய்து 46 மற்றும் 1 ரன் எடுத்து இருந்தார் ரெய்னா. குறைந்த வாய்ப்புகளில் ஓரளவு ரன் குவித்து இருந்தார்.

அணியில் இடம் இல்லை
ஓரளவு ரன் குவித்தும் அவருக்கு வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆஸ்திரேலிய டி20 தொடர்களுக்கான அணியில் இடம் மறுக்கப்பட்டது. தொடர்ந்து தற்போது நியூசிலாந்து டி20 தொடருக்கான அணியிலும் இடம் மறுக்கப்பட்டுள்ளது. என்ன காரணம் என்பது புரியாத புதிராகவே உள்ளது.

காரணம் இதுவா?
2௦20 டி20 உலகக்கோப்பை மற்றும் 2019 50 ஓவர் உலகக்கோப்பை ஆகியவற்றை மனதில் வைத்தே தற்போதைய இந்திய அணி தேர்வு செய்யப்பட்டு வருவதாக தெரிகிறது. 50 ஓவர் உலகக்கோப்பையில் ரெய்னா ஆட மாட்டார் என்பதால் அவருக்கு டி20 அணியிலும் வாய்ப்பு மறுக்கப்படுகிறதா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. தற்போது 32 வயதாகும் ரெய்னா, 2020 டி20 உலகக்கோப்பையில் ஆடுவதில் எந்த சிக்கலும் இல்லை என்றாலும் அவருக்கு டி2௦ அணியில் இடம் மறுக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications