Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இதுக்கு மட்டும் நேரம் இருக்கா?.. கிளப்பில் ஆட்டம் போட்ட ரெய்னா.. கைதால் சர்ச்சையில் சிக்கிய சின்ன தல

டெல்லி: இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா மிட் நைட் கிளப்பிற்கு சென்று கைது செய்யப்பட்ட சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா நேற்று மும்பையில் கைது செய்யப்பட்டார். மும்பையில் உள்ள டிராகன் பிளை கிளப்பில் இவர் கைது செய்யப்பட்டார்.

ஆனால் கைது செய்யப்பட்ட ரெய்னா பெயிலில் விடுவிக்கப்பட்டார். கொரோனா விதிகளை மீறி செயல்பட்டதாகவும், கூட்டமாக கூடியதாகவும், இரவில் நீண்ட நேரம் கிளப்பில் இருந்ததாக கூறி இவர் கைது செய்யப்பட்டார்.

என்ன நடந்தது

என்ன நடந்தது

நேற்று இரவு 2.30 மணிக்கு ரெய்னா கைது செய்யப்பட்டார். இவர் கைது செய்யப்பட்ட போது அதிக அளவில் குடித்து இருந்ததாக கூறப்படுகிறது. அதன்பின் காலையில் சுரேஷ் ரெய்னாவும் இவரின் நண்பரும் பெயிலில் விடுவிக்கப்பட்டனர்.

ரெய்னா கைது

ரெய்னா கைது

ரெய்னாவுடன் சில நடிகைகளும் இதில் கைது செய்யப்பட்டனர். ரெய்னா இப்படி இரவு நேர கிளப்பில் ஆட்டம் போட்டு கைது செய்யப்பட்டது பெரிய சர்ச்சையாகி உள்ளது. டிவிட்டரில் இவருக்கு எதிராக பலரும் கடுமையான கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

என்ன சொன்னார்கள்

என்ன சொன்னார்கள்

ரெய்னா இப்போது பொறுப்பில்லாமல் மாறிவிட்டார். இந்திய அணியில் இருந்து ஓய்வு பெற்ற பின் ரெய்னா ஐபிஎல்லில் ஆடவில்லை. பயிற்சி கூட சரியாக மேற்கொள்ளவில்லை. முதல் தர போட்டிகளிலும் ஆடவில்லை. .

சுற்றுகிறார்

சுற்றுகிறார்

இப்படி இருக்கும் போது இப்போது கிளப், பப் என்று சுற்றுகிறார் என்று பலர் விமர்சனங்களை வைத்துள்ளனர். தனக்கு பால்கனி அறை கிடைக்கவில்லை என்று கூறி சிஎஸ்கே அணி நிர்வாகத்துடன் சண்டை போட்டவர் ரெய்னா. கடந்த ஐபிஎல் தொடரிலும் ரெய்னா ஆடவில்லை.

சிஎஸ்கே

சிஎஸ்கே

கிரிக்கெட் ஆடுவதற்கு யோசிக்கும் ரெய்னா, இப்போது கிளப்பிற்கு செல்ல மட்டும் நேரம் ஒதுக்குகிறார்.. அவர் கிரிக்கெட் மீதும் கவனம் செலுத்த வேண்டும். அவர் அடுத்த ஐபிஎல் தொடருக்கு தன்னை தயார் செய்ய வேண்டும் என்று பலர் விமர்சனம் செய்து வருகிறார்கள்.

Story first published: Tuesday, December 22, 2020, 17:39 [IST]
Other articles published on Dec 22, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+