ஷிகர் தவான் கொள்ளைக்காரன் மாதிரியே சிரிப்பார்: ரெய்னா குசும்பு
டெல்லி: கேப்டன் டோணி தான் இந்திய கிரிக்கெட் அணியின் காமெடியன் என்று கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.
கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா பாலிவுட் படம் ஒன்றின் மூலம் பாடகர் அவதாரம் எடுக்கிறார். இந்நிலையில் அவர் டிவி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசினார்.
நிகழ்ச்சியில் அவர் கேப்டன் டோணி பற்றி தெரிவித்துள்ளார்.
டோணி பற்றி ரெய்னா கூறுகையில்,

டோணி
பிறரை பொருத்த வரையில் எனக்கு தெரியாது. ஆனால் என்னைப் பொருத்த வரை இந்திய கிரிக்கெட் அணியின் காமெடியன் என்றால் அது டோணி தான்.

காமெடியன்
டோணி மைதானத்தில் மிகவும் சீரியஸாக இருப்பார். ஆனால் வீரர்கள் உடை மாற்றும் அறைக்குள் நுழைந்துவிட்டால் ஜோக் சொல்லி எங்கள் அனைவரையும் சிரிக்க வைத்துக் கொண்டே இருப்பார்.

மகிழ்ச்சி
டோணி மூலம் தான் மகிழ்ச்சியாக இருக்க கற்றுக் கொண்டேன். சாக்ஷி குழந்தையை பெற்றெடுக்கையில் நீங்கள் ஏன் அவருடன் இருக்கவில்லை என்று நான் அவரிடம் கேட்டேன். அதற்கு அவர் நாடு தான் முக்கியம் என்றார்.

கூல்
நீங்கள் டென்ஷனாக இருந்தால் டோணியிடம் பேசினீர்கள் எனில் கூல் ஆகிவிடுவீர்கள். டோணி தற்போது ஓய்வு நேரத்தில் மகளின் டயாபரை மாற்றிக் கொண்டிருக்கிறார்.

ஷிகர் தவான்
கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் கொள்ளைக்காரன் போல சிரிப்பார் என்று அவரை வைத்து காமெடி செய்தார் ரெய்னா.


Click it and Unblock the Notifications