Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இப்படியும் பிறந்தநாள் கொண்டாடலாம்.. 34 பள்ளிகளுக்கு சுரேஷ் ரெய்னா உதவி.. பாராட்டும் ரசிகர்கள்!

டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா தன் 34வது பிறந்த நாளை பள்ளிகளுக்கு உதவுவதன் மூலம் கொண்டாட உள்ளார்.

34வது பிறந்த நாளில் 34 பள்ளிகளுக்கு சுகாதாரம் மற்றும் குடிநீர் வசதி செய்து கொடுக்க இருக்கிறார் அவர்.

இதன் மூலம் இந்தப் பள்ளிகளில் பயிலும் 10,000 குழந்தைகள் பலன் அடைவார்கள் என கூறப்படுகிறது. மேலும், 500 ஏழைப் பெண்களுக்கு உணவுப் பொருட்களும் வழங்கி உள்ளார்.

34 பள்ளிகளுக்கு உதவி

34 பள்ளிகளுக்கு உதவி

சுரேஷ் ரெய்னாவின் பிறந்த நாள் நவம்பர் 27 அன்று கொண்டாடப்பட உள்ளது. அவருக்கு 34 வயது ஆக உள்ள நிலையில் அவர் 34 பள்ளிகளுக்கு உதவ முடிவு செய்துள்ளார். பிரதமரின் சுவச் பாரத் திட்டத்தின் தூதுவராக இருக்கும் ரெய்னா அந்த பள்ளிகளில் சுகாதார வசதிகள் மற்றும் குடிநீர் வசதியை செய்து தர உள்ளார்.

மகளின் பெயரில் உதவி

மகளின் பெயரில் உதவி

தன் மகளின் பெயரில் இயங்கும் கிரேசியா ரெய்னா பவுண்டேஷன் மூலம் இந்த உதவிகளை அவர் செய்ய உள்ளார். யுவா அன்ஸ்டாப்பபிள் என்ற இயக்கத்துடன் சேர்ந்து அடுத்த வருடம் முழுக்க இந்த நலத் திட்ட உதவிகள் பல்வேறு கட்டங்களாக நடைபெறும்.

விழிப்புணர்வு

விழிப்புணர்வு

மேலும், ரைட்ஏஜ் என்ற மாணவிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியையும் ஒவ்வொரு பள்ளியிலும் நடத்த அவர் முடிவு செய்துள்ளார். மேலும், ஸ்மார்ட் பள்ளி அறைகளையும் ஏற்படுத்தித் தர உள்ளார் ரெய்னா. இது எல்லாமே உத்தர பிரதேசம், காஷ்மீர் மற்றும் என்சிஆர் பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளில் நடைபெற உள்ளது.

பாராட்டு

பாராட்டு

சுரேஷ் ரெய்னா சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ள நிலையில், சமூக சேவைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக அவர் பள்ளிகளுக்கு உதவ உள்ளதை பலரும் பாராட்டி உள்ளனர். அவர் அரசியலுக்கு வர உள்ளதாகவும் ஒரு பேச்சு அடிபடுவது குறிப்பிடத்தக்கது.

Story first published: Monday, November 23, 2020, 16:03 [IST]
Other articles published on Nov 23, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+