Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அழகான மலைப்பகுதி... மனதுக்கு பிடித்த பிட்னஸ் பயிற்சிகள்... பயிற்சி செய்த ரெய்னா

டெல்லி : ஐபிஎல் தொடரிலிருந்து விலகி நாடு திரும்பிய சிஎஸ்கே அணி வீரர் சுரேஷ் ரெய்னா தற்போது தீவிர பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்.

அழகான மலைகளின் பின்புலத்தில் தனக்கு பிடித்தமான பயிற்சிகளை அவர் மேற்கொண்டார். இதுகுறித்த வீடியோவை அவர் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

ஐபிஎல் போட்டிகளில் மீண்டும் தான் மஞ்சள் நிற ஜெர்சியை அணிந்து விளையாடுவதற்காக தன்னுடைய ரசிகர்கள் காத்திருப்பதாக சமீபத்தில் ரெய்னா தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Suresh Raina Trains At Picturesque Location, Shares Video

ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்பதற்காக தன்னுடைய சிஎஸ்கே அணி வீரர்களுடன் உற்சாகமாக தன்னுடைய பயணத்தை துவங்கிய சுரேஷ் ரெய்னா, துபாய் சென்ற சில தினங்களிலேயே தொடரிலிருந்து விலகி நாடு திரும்பினார். இதற்கு பல காரணங்கள் கூறப்பட்டாலும் தன்னுடைய சொந்த காரணங்களுக்காகவே தான் இந்த முடிவை எடுத்ததாக அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில் தான் மீண்டும் ஐபிஎல்லின் இந்த சீசனில் விளையாடுவேன் என்றும் தன்னுடைய ரசிகர்கள் தனக்காக காத்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். இந்தியா திரும்பிய நிலையிலும் தன்னுடைய பயிற்சிகளை தொடர்ந்து வருகிறார். தற்போது தன்னுடைய பயிற்சியின் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ளார். அழகிய மலைப்பாங்கான பகுதியில் அவர் தனது பயிற்சியை இந்த வீடியோவில் மேற்கொண்டுள்ளார்.

Story first published: Monday, September 7, 2020, 20:24 [IST]
Other articles published on Sep 7, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+