Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

என்ன தொட்ட… நீ கெட்ட….! பாக்சிங் பயிற்சியில் சின்ன தல… வைரல் வீடியோ

Recommended Video

IPL 2019: Suresh Raina boxing Video | ரெய்னா, பாக்ஸிங் பயிற்சியில் ஈடுபட்ட வீடியோ

சென்னை: சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் சின்ன தல என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் சுரேஷ் ரெய்னா, பாக்ஸிங் பயிற்சியில் ஈடுபட்ட வீடியோ வைரலாகி வருகிறது.

12வது ஐ.பி.எல் கிரிக்கெட் திருவிழா கடந்த 23-ம் தேதி தொடங்கி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் முதல் போட்டி நடைபெற்றது.

Suresh raina tries his hand at boxing in chennai

அந்த தொடக்க போட்டியில் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை, தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்சை எதிர்கொண்டது. அதில், 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

வெற்றியுடன் தொடரை தொடங்கிய சென்னை அணி, 2வது லீக் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை எதிர்கொண்டது. பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடந்த இப்போட்டியில் சென்னை அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

2 போட்டிகளில் விளையாடி இரண்டிலும் வெற்றி பெற்ற சென்னை அணி புள்ளிப்பட்டியலில், 4 புள்ளிகளுடன் 2வது இடத்தில் உள்ளது. இதனை அடுத்து, நாளை மறுநாள் சேப்பாக்கத்தில் நடைபெறும் போட்டியில் சென்னை அணி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

அதற்காக, சொந்த மைதானத்தில் சென்னை வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை அணியின் சின்ன தல என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் சுரேஷ் ரெய்னா, பாக்ஸிங் பயிற்சியில் ஈடுபட்டார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Story first published: Friday, March 29, 2019, 13:34 [IST]
Other articles published on Mar 29, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+