Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரெய்னாவுக்காக சிஎஸ்கே இதை செய்யும்.. இதுதான் நடக்கும்.. அடித்து சொல்லும் முன்னாள் வீரர்!

துபாய் : 2020 ஐபிஎல் தொடரில் இருந்து விலகி இருக்கும் சுரேஷ் ரெய்னா மீண்டும் ஐபிஎல் தொடருக்கு திரும்புவார் என உறுதியாக கூறி உள்ளார் முன்னாள் வீரர் தீப் தாஸ்குப்தா.

Recommended Video

Dhoniயிடம் Chance கேட்ட Raina! உணர்ச்சிகரமான சம்பவம் | OneIndia Tamil

சென்னை சூப்பர் கிங்ஸ் எடுக்கப் போகும் முடிவு ஒன்றைப் பற்றியும் அவர் கூறி உள்ளார்.

சுரேஷ் ரெய்னா முன்னதாக தான் சிஎஸ்கே அணிக்கு திரும்புவேன் என கூறி இருப்பது குறிப்பிடத்தக்கது.

ஓய்வு அறிவிப்பு

ஓய்வு அறிவிப்பு

சுரேஷ் ரெய்னா 2020 ஐபிஎல் தொடரில் ஆட துவக்கத்தில் ஆர்வமாக இருந்தார். ஆகஸ்ட் 15 அன்று தோனியுடன் ஓய்வை அறிவித்து இனி முழுவதுமாக சிஎஸ்கே அணிக்காக தான் ஐபிஎல் தொடரில் ஆட உள்ளதாக அறிவித்தார். எல்லாம் சரியாகவே சென்றது.

அச்சம்

அச்சம்

சிஎஸ்கே அணியுடன் துபாய் வந்தடைந்தார். ஒரு வார குவாரன்டைனில் இருந்தார். அப்போது சிஎஸ்கே முகாமில் இரு வீரர்கள் உட்பட 13 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது. அதனால், அச்சம் ஏற்பட்டு சுரேஷ் ரெய்னா இந்தியா திரும்பியதாக கூறப்படுகிறது.

மீண்டும் பங்கேற்க வாய்ப்பு

மீண்டும் பங்கேற்க வாய்ப்பு

சுரேஷ் ரெய்னா 2020 ஐபிஎல் தொடரில் இருந்து விலகியதாக சிஎஸ்கே அணி நிர்வாகம் அறிவித்தது. எனினும், சுரேஷ் ரெய்னா மீண்டும் சிஎஸ்கே அணியுடன் இணைந்து இந்த ஐபிஎல் தொடரில் பங்கேற்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

வீட்டிலேயே பயிற்சி

வீட்டிலேயே பயிற்சி

சுரேஷ் ரெய்னா இது குறித்து தான் அளித்த பேட்டிகளில் குறிப்பிட்டுள்ளார். தான் வீட்டிலேயே பயிற்சி செய்து வருவதாகவும், எப்போது வேண்டுமானாலும் சிஎஸ்கே அணியுடன் இணைய வாய்ப்பு உள்ளதாக கூறி இருக்கிறார். சிஎஸ்கே முகாமில் கொரோனா வைரஸ் பாதிப்பு நீங்கிய பின் அவர் இணையக் கூடும்.

நிச்சயம் ரெய்னா ஆடுவார்

நிச்சயம் ரெய்னா ஆடுவார்

இது பற்றி முன்னாள் இந்திய அணி விக்கெட் கீப்பர் தீப் தாஸ்குப்தா கூறுகையில், ரெய்னா நிச்சயம் ஐபிஎல் தொடரில் ஆடுவார். ஆனால், முதல் சில போட்டிகளை அவர் குவாரன்டைன் காரணமாக இழப்பார். எப்படியும் ரெய்னா ஆடுவார் என்றார்.

சிஎஸ்கே அணி முடிவு

சிஎஸ்கே அணி முடிவு

சுரேஷ் ரெய்னாவுக்கு மாற்று வீரரை சிஎஸ்கே அணி தேர்வு செய்யாது. அதன் மூலம், அவர் மீண்டும் அணியில் இடம் பெற வாய்ப்பு கிடைக்கும் என்றும் கூறினார் தீப் தாஸ்குப்தா. ரெய்னா மீண்டும் இதே சீசனில் ஐபிஎல் தொடருக்கு திரும்புவது அத்தனை எளிதாக இருக்காது.

சிக்கல்

சிக்கல்

சுரேஷ் ரெய்னா இந்தியாவில் தற்போது 14 நாட்கள் குவாரன்டைனில் இருக்கிறார். அதன் முடிவில் அவருக்கு இரண்டு அல்லது மூன்று கொரோனா வைரஸ் பரிசோதனைகள் செய்யப்பட்டு அதில் பாதிப்பு இல்லை என உறுதிப்படுத்த வேண்டும். அதன் பின் அவர் துபாய் செல்லலாம்.

துபாயிலும் குவாரன்டைன்

துபாயிலும் குவாரன்டைன்

துபாயிலும் அவர் ஆறு நாள் குவாரன்டைனில் இருக்க வேண்டும். அப்போது அவருக்கு மூன்று முறை கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்படும். அதிலும் அவருக்கு பாதிப்பு இல்லை என உறுதி ஆன பின்னரே அவரால் சிஎஸ்கே அணியுடன் இணைய முடியும்.

பிசிசிஐ விசாரணை

பிசிசிஐ விசாரணை

இதற்கிடையே பிசிசிஐ, ரெய்னா ஏன் இந்தியா சென்றார் என விசாரணை செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. அவர் குடும்பதிற்காகவோ அல்லது சிஎஸ்கே நிர்வாகம், தோனி உடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டோ சென்று இருந்தால் அதில் எந்த சிக்கலும் இல்லை.

சிஎஸ்கே அணிக்கு சிக்கல்

சிஎஸ்கே அணிக்கு சிக்கல்

ஆனால், மன அழுத்தத்தால் அவர் விலகி இருந்தால் பிசிசிஐ அது குறித்து விசாரித்து தீர்வு அளிக்க முற்படும் என கூறப்படுகிறது. சிஎஸ்கே அணிக்கும் அது சிக்கலாக அமையக்கூடும். இத்தனை சிக்கல்களுக்கு மத்தியில் ரெய்னா சிஎஸ்கே அணிக்கு திரும்புவாரா?

Story first published: Sunday, September 6, 2020, 15:32 [IST]
Other articles published on Sep 6, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+