வங்கதேசத்துக்கு எதிரான ஆட்டம்.. 4 கீப்பர்களுடன் களம் இறங்கிய இந்தியா... காரணம் இது தான்
Recommended Video
எட்ஜ்பாஸ்டன்: வங்கதேசத்துக்கு எதிரான முக்கிய போட்டியில், தோனி, ரிஷப் பன்ட், தினேஷ் கார்த்திக் என 4விக்கெட் கீப்பர்கள் இருப்பது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
உலக கோப்பையில் வங்கதேசத்துக்கு எதிரான முக்கியமான லீக் ஆட்டத்தில் இந்திய அணியின் கேப்டன் கோலி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். வங்கதேசம் இது வரை 7 போட்டிகளில் 3 வெற்றி, 3 தோல்வி 7 புள்ளிகளுடன் 6வது இடத்தில் உள்ளது. இந்தியாவையும், அடுத்து பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்திலும் வென்றால் அரையிறுதி வாய்ப்பு உண்டு.
ஆனால், இங்கிலாந்து, நியூசிலாந்திடம் தோற்றால் மட்டுமே வங்கதேசம் அரையிறுதிக்குச் செல்ல வாய்ப்பு உண்டு. ஆதலால், இந்த ஆட்டம் முக்கியமான ஒன்று. இந்திய அணி ஏற்கனவே அரையிறுதிக்குள் சென்றாலும், பாதுகாப்பான இடத்தைப் பெற இன்னும் ஒரு வெற்றி அவசியம்.

அந்த மைதானம் தான்
இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி நடந்த அதே மைதானத்தில்தான் இன்றைய ஆட்டமும் நடக்கிறது. முதலில் பேட்டிங் செய்து இங்கிலாந்து அபாரமான ஸ்கோர் செய்தது. ஆகையால், டாஸ் வென்ற கோலி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.

மாற்றங்கள் 2
அணியில் 2 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக கூறிய அவர், கேதர் ஜாதவுக்கு பதிலாக தினேஷ் கார்த்திக், அதிக ரன்களை விட்டுக்கொடுத்த குல்தீப் யாதவுக்கு பதிலாக புவனேஸ்வர் குமார் சேர்க்கப்பட்டுள்ளனர் என்றார். அவரின் இந்த தேர்வு ரசிகர்களிடையே மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

தினேஷ் கார்த்திக்
வங்கதேசம் அணிக்கு எதிராக தினேஷ் கார்த்திக் சிறப்பாக விளையாடக் கூடியவர் என்பதால், தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதில் பல ஆச்சர்யங்களை ரசிகர்கள் கண்டு வியக்கின்றனர். அதாவது 4 விக்கெட் கீப்பர்களுடன் இந்திய அணி களம் இறங்கியிருக்கிறது.

4 பவுலர்கள்
தோனி, ரிஷப் பன்ட், தினேஷ் கார்த்திக், கே.எல்.ராகுல் என இந்திய அணியில் 4 விக்கெட் கீப்பர்கள் களம் இறங்கி இருக்கின்றனர். மேலும் 4 வேகப்பந்து வீச்சாளர்கள் இடம் பிடித்துள்ளனர். இன்னும் சொல்லப்போனால்... மேலும் ஒரு ஆச்சரியத்தை சொல்லலாம். தோனி, தினேஷ், பன்ட் மூவரும் ஒன்றாக இந்தியாவுக்காக டி 20 போட்டிகளில் களம் இறங்கியவர்கள். எல்லாம்...இங்கிலாந்துக்கு எதிரான தோல்வி கொடுத்த பாடம் தான்.


Click it and Unblock the Notifications