Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

என்னை இப்படி ஏமாத்திட்டீங்களே… நியாயமா? வேதனையில் புலம்பி தள்ளிய இளம் வீரர்

Recommended Video

Shubman Gill : இந்திய அணியில் இடமில்லை... புலம்பு இளம் வீரர் - வீடியோ

மும்பை: வெஸ்ட் இண்டீஸ் தொடரில் தமது பெயர் இடம்பெறாதது மிகுந்த ஏமாற்றத்தை அளிப்பதாக இளம் வீரர் சுப்மன் கில் வேதனை தெரிவித்துள்ளார்.

இந்திய ஏ அணியில் விளையாடி வரும் இளம் வீரரான சுப்மான் கில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். வெஸ்ட்இண்டீஸ்க்கு எதிராக இந்திய ஏ அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடியது.

4 போட்டிகளில் விளையாடிய கில் 3 அரைசதங்களுடன் 218 ரன்கள் குவித்து தொடர் நாயகன் விருதை தட்டிச் சென்றார். அதிகபட்சமாக 77 ரன்கள் அடித்த அவரின் சராசரி 54.5 ஆகும்.

இந்திய அணி அறிவிப்பு

இந்திய அணி அறிவிப்பு

வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி சில நாட்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. அதில் தமது பெயர் இடம்பெறும் என்று எதிர்பார்த்திருந்தார். ஆனால், இடம் கிடைக்கவில்லை. இது மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது என்று சுப்மான் கில் தெரிவித்துள்ளார்.

எனக்கு ஏமாற்றமே

எனக்கு ஏமாற்றமே

இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: இந்திய அணி அறிவிப்பிற்காக காத்துக் கொண்டிருந்தேன். அணியில் இடம் பிடிப்பேன் என்று எதிர்பார்த்தேன். அணியில் இடம் பெறாதது ஏமாற்றம் அளிக்கிறது.

கவனம் செலுத்துவேன்

கவனம் செலுத்துவேன்

ஆனால், அதைப் பற்றியே சிந்தித்து நேரத்தை வீணடிக்க நான் விரும்பவில்லை. தேர்வாளர்கள் கவனத்தை ஈர்க்கும் வகையில் இனி வரும் போட்டிகளில் அதிக ரன்கள் குவிப்பதிலும், எனது ஆட்டத்தை மேம்படுத்துவதிலும் கூடுதல் கவனம் செலுத்துவேன். நிச்சயம் ஒரு நாள் அணியில் இடம்பெறுவேன் என்றார்.

3 அரை சதங்கள்

3 அரை சதங்கள்

வெஸ்ட் இண்டீஸ் ஏ அணியை 4க்கு 1 என வீழ்த்தியது எனக்கும், அணிக்கும் முக்கியமான தொடராக அமைந்தது. தனிப்பட்ட முறையில் 3 அரைசதங்களை சதங்களாக மாற்ற விரும்பினேன். ஆனால் இந்த அனுபவத்தில் இருந்து நான் கற்றுக் கொள்ளலாம் என்றார்.

Story first published: Wednesday, July 24, 2019, 12:45 [IST]
Other articles published on Jul 24, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+