பிரபலமான வீரர்கள் பட்டியல்... சச்சின் மற்றும் கோஹ்லியை முந்தினார்... தல தோனிதான் டாப்!
டெல்லி: இந்தியாவில் மிகவும் பிரபலமான விளையாட்டு வீரர்கள் பட்டியலில், சச்சின் டெண்டுல்கர், விராட் கோஹ்லி ஆகியோரை பின்தள்ளி, கேப்டன் கூல் மகேந்திர சிங் தோனி முதலிடத்தில் உள்ளார்.
யூகவ் என்ற பிரிட்டனை சேர்ந்த அமைப்பு ஒவ்வொரு ஆண்டும், ஆண்டின் சிறந்த பிரபலங்கள் பட்டியலை வெளியிட்டு வருகிறது. 2018ம் ஆண்டுக்கான பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

பொதுமக்கள் ஓட்டளித்து, இந்தப் பிரபலங்களை தேர்வு செய்கின்றனர். இவ்வாறு நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் இந்தியாவில் மிகவும் பிரபலமானவர்கள் யார் என்ற பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் பிரதமர் மோடி முதலிடத்திலும், கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி இரண்டாவது இடத்திலும் உள்ளனர்.
விளையாட்டு வீரர்கள் பிரிவில் 7.7 சதவீத ஓட்டுகளுடன் தோனி முதலிடத்தில் உள்ளார். சச்சின் டெண்டுல்கர் 6.8 சதவீத ஓட்டுகளுடன் இரண்டாவது இடத்திலும், 4.8 சதவீத ஓட்டுகளுடன் கோஹ்லி மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.
சமீபத்தில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான ஒருதினப் போட்டியின்போது மிகவும் மெதுவாக விளையாடினார் என்று தோனி குறித்து குறை கூறினார்கள். மேலும் அவர் ஓய்வு பெறும் சூழ்நிலை வந்துவிட்டது என்றும் விமர்சித்தனர். இருந்தாலும் மக்களின், ரசிகர்களின் ஆதரவு தோனிக்கு உள்ளது என்பது இந்த கருத்துக் கணிப்பில் இருந்து மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications