Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இவர்தான்.. அடுத்த ஒரு வருடம் இந்திய அணியை ஆட்டிப்படைக்க போகும் வீரர்.. என்ன செய்ய போகிறாரோ கோலி!

டெல்லி: 2021ல் இந்திய அணியின் மிடில் ஆர்டரில் செலுத்த போகும் வீரர் யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியின் மோசமான ஆட்டத்தை தொடர்ந்து பிசிசிஐ நிர்வாகிகள் தீவிரமான ஆலோசனை கூட்டங்களை நடத்தி வருகிறார்கள். இந்திய அணி தேர்வில் செய்யப்பட சொதப்பல் காரணமாகவே இந்திய அணி தோல்வி அடைந்துவிட்டது என்று கருத்து நிலவி வருகிறது.

அதிலும் கோலிக்கு நெருக்கமான வீரர்களுக்கு அதிகம் வாய்ப்பு கொடுத்ததும், ரோஹித் சர்மாவை புறக்கணித்ததும் இந்திய அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

எப்படி

எப்படி

இதனால் அடுத்த வருட தொடக்கத்தில் நடக்க உள்ள இங்கிலாந்து தொடர் தொடங்கி மற்ற கிரிக்கெட் தொடர் அனைத்திலும் இந்திய அணியை கடுமையாக தேர்வு செய்ய பிசிசிஐ முடிவு செய்துள்ளது. முறையான தேர்வு முறைகளை பின்பற்றி வீரர்களை தேர்வு செய்ய பிசிசிஐ முடிவு செய்துள்ளது.

கோலி

கோலி

முக்கியமாக கோலிக்கு ஆதரவான வீரர்கள் மட்டுமின்றி அனைவருக்கும் வாய்ப்பு கொடுக்க பிசிசிஐ ஆலோசனையா செய்து வருகிறது. அதன் ஒரு கட்டமாக பிசிசிஐ அடுத்த வருடம் சூர்ய குமார் யாதாவிற்கு வாய்ப்பு கொடுக்கும் என்கிறார்கள் . இந்திய அணியின் மிடில் ஆர்டரில் இவர் அடுத்த வருடம் ஆதிக்கம் செலுத்துவார் என்று கூறப்படுகிறது.

மிடில் ஆர்டர்

மிடில் ஆர்டர்

தற்போது இந்திய அணியின் மிடில் ஆர்டரில் களமிறங்கும் ஷ்ரேயஸ் ஐயர், சஞ்சு சாம்சன், பண்ட் என்று யாரும் பெரிய அளவில் நம்பிக்கை தருவது இல்லை. ஆஸ்திரேலிய தொடரிலும் இவர்கள் சரியாக ஆடவில்லை. இதனால் அடுத்த வருடம் நடக்க உள்ள இங்கிலாந்து தொடர் உள்ளிட்ட தொடர்களில் சூர்யகுமார் யாதவ் ஆட வாய்ப்புள்ளது.

 முதல் தர போட்டிகள்

முதல் தர போட்டிகள்

முதல் தர போட்டிகளில் இவர் மிகவும் அதிரடியாக ஆடி வருகிறார். தற்போது நடந்து வரும் போட்டிகளிலும் இவர் சதம் அடித்து அசத்தி உள்ளார்.சையது முஷ்டாக் பயிற்சி ஆட்டத்தில் இவர் மாஸ் ஆட்டம் ஆடி வருகிறார். இவரின் ஆட்டத்தை இந்திய அணியின் தேர்வுக்குழு தீவிரமாக கவனித்து வருகிறது.

கோலி

கோலி

சூர்யகுமார் யாதவ் மீது கோலி கோபத்தில் இருந்தார். தற்போது கோலியும் கூட சூர்ய குமார் யாதாவிற்கு வாய்ப்பு கொடுக்கலாம் என்ற திட்டத்தில்தான் இருக்கிறார். இதனால் அடுத்த வருடம் சூர்யகுமார் யாதவ் வாய்ப்பு பெற போவதாக கூறப்படுகிறார்கள் AUS vs IND: Fans are asking Kohli to bring Surya Kumar Yadav to Team India

Story first published: Tuesday, December 22, 2020, 17:42 [IST]
Other articles published on Dec 22, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+