Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்தியா -ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம்... வீரர்களை தேர்ந்தெடுக்கும் பணி மும்முரம்

டெல்லி : ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தை மேற்கொள்ளவுள்ள அணியை தேர்ந்தெடுக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இதற்கென 32 வீரர்களை தேர்ந்தெடுக்கும் பணியில் ஆன்லைன் மூலம் தேர்வாளர்கள் இன்று ஈடுபட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த அணியில் சூர்யகுமார் யாதவ், முகமது சிராஜ் மற்றும் நவ்தீப் சைனி ஆகியோருக்கு வாய்ப்பளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய அணியினர் சுற்றுப்பயணம்

இந்திய அணியினர் சுற்றுப்பயணம்

ஐபிஎல்லின் 13வது சீசன் துவங்கி நடைபெற்று வருகிறது. இதை தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் இந்திய அணியினர் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் தொடர்களில் விளையாடவுள்ளனர். டிசம்பர் மாதம் வரையில் இந்த தொடர் நீடிக்க உள்ளது.

32 வீரர்கள் அடங்கிய அணி

32 வீரர்கள் அடங்கிய அணி

இந்த தொடரில் இடம்பெறும் இந்திய வீரர்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. மாறாக தேர்வுக்குழுவினர் இன்று ஆன்லைன் மூலம் கூடி 32 பேர் அடங்கிய வீரர்களை தேர்ந்தெடுக்கும் பணியில் ஈடுபட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. முன்னாள் இந்திய ஸ்பின்னர் சுனில் ஜோஷி தலைமையில் இந்த குழுவினர் வீரர்களை தேர்ந்தெடுக்க உள்ளனர்.

விஜய் சங்கர், ஷிவம் தூபே இடம்பிடிப்பு

விஜய் சங்கர், ஷிவம் தூபே இடம்பிடிப்பு

காயம் காரணமாக இந்த அணியின் டெஸ்ட் தொடரில் ஹர்திக் பாண்டியா இடம்பெற மாட்டார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவருக்கு பதிலாக விஜய் சங்கர் மற்றும் ஷிவம் தூபேவிற்கு வாய்க்கப்பளிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

டெஸ்ட் போட்டியிலும் பங்கேற்பு

டெஸ்ட் போட்டியிலும் பங்கேற்பு

இதேபோல விக்கெட் கீப்பிங்கில் கேஎல் ராகுலுக்கு வாய்ப்பளிக்கப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. தற்போது ஐபிஎல்லிலும் சிறப்பாக செயல்பட்டுவரும் ராகுல், டி20 உள்ளிட்டவற்றில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இவர் டெஸ்ட் போட்டிகளிலும் பங்கேற்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இவர் ரோகித் மற்றும் மயங்க் அகர்வாலுடன் இணைந்து துவக்க ஆட்டக்காரராக களமிறங்குவார் என்றும் கூறப்பட்டுள்ளது.

சிராஸ், சைனிக்கும் வாய்ப்பு

சிராஸ், சைனிக்கும் வாய்ப்பு

தற்போது சூர்யகுமார் யாதவ் டி20 போட்டிகளுக்காக தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. காயம் காரணமாக இஷாந்த் சர்மா மற்றும் புவனேஸ்வர் குமார் இந்த தொடரில் இடம்பெற வாய்ப்பில்லாத நிலையில், அவர்களுக்கு பதிலாக முகமது சிராஜ் மற்றும் நவ்தீப் சைனி ஆகியோருக்கு வாய்ப்பளிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Monday, October 26, 2020, 18:59 [IST]
Other articles published on Oct 26, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+