For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கட்ட துரைக்கு கட்டம் சரியில்ல.. தொடர்ந்து சொதப்பும் சூர்யகுமார், சுப்மன் கில்.. நடவடிக்கை பாயுமா?

கயானா : வெஸ்ட் இண்டீஸ் அன்னைக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் சுப்மன் கில் மற்றும் சூரியகுமார் யாதவ் தொடர்ந்து சொதப்பி வருவது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அடுத்த ஆண்டு மேற்கிந்திய தீவுகளில் தான் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெறுகிறது இந்தத் தொடருக்கு யாரை தேர்வு செய்யலாம் என்பதை முன்கூட்டியே தெரிந்து கொள்ள இளம் வீரர்களை வைத்து இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் தொடரில் களம் இறங்கியது.

Suryakumar and shubman gill struggling in t20 series vs west indies

ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோர் இல்லாத நிலையில் சூரியகுமார் யாதவ் கில் சஞ்சு சாம்சன் போன்ற வீரர்களை வைத்து இந்தியா இந்த தொடரில் விளையாடியது வெஸ்ட் இண்டீஸ் அணியை எளிதில் வீழ்த்தி விடலாம் என இந்தியா நினைத்தபோது முதல் டி20 போட்டியில் ஹர்திக் படை தோல்வியை தழுவியது.

இதற்கு காரணம் சூரியகுமார் யாதவ், சுப்மன் கில், சஞ்சு சாம்சன் ஆகிய போன்ற முக்கிய வீரர்கள் சொற்பரன்களில் ஆட்டம் இழந்தனர். இந்த நிலையில் இரண்டாவது டி20 போட்டி ஏதாவது இந்தியா அபாரமாக விளையாடும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் நட்சத்திர வீரர்கள் 7 ரன்களை மட்டுமே எடுத்து பெவிலியன் திரும்பினார்.இதனால் இந்தியாவுக்கு சோகமான தொடக்கமாக அமைந்தது.இதைப் போன்று சூரிய குமார்யாதவ் ஒரு ரன்னில் ரன் அவுட் ஆகி ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தார்.

இதேபோன்று சிறப்பான வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள முடியாமல் ஏழு ரன்கள் சஞ்சு சம்சனும் ஆட்டம் இழந்தார். இதன் காரணமாக இந்திய அணி வெறும் 152 ரன்கள் மட்டுமே எடுத்தது. உலகக்கோப்பை ஆசிய கோப்பை போன்ற பெரிய தொடர்கள் வரும்போது வீரர்கள் நல்ல பார்மில் இருப்பார்கள் என ரசிகர்கள் நினைத்தனர்.

ஆனால் கில், சூரியகுமார் யாதவ் போன்ற வீரர்கள் எல்லாம் அடுத்தடுத்து தடுமாறுவது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதனால் இந்த மூன்று வீரர்கள் மீதும் பிசிசிஐ ஏதேனும் நடவடிக்கை எடுக்குமா என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மூன்று வீரர்களும் கொடுக்கின்ற வாய்ப்பை வீணடிப்பதால் பயிற்சியாளர் டிராவீட்டும் செம கடுப்பில் இருக்கிறார்.

Story first published: Sunday, August 6, 2023, 23:21 [IST]
Other articles published on Aug 6, 2023
English summary
Suryakumar and shubman gill struggling in t20 series vs west indies கட்ட துரைக்கு கட்டம் சரியில்ல.. தொடர்ந்து சொதப்பும் சூர்யகுமார், சுப்மன் கில்.. நடவடிக்கை பாயுமா?
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+