Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கிரிக்கெட்டின் பாட்ஷா சூர்யகுமார்.. கையில் முத்தமிட்ட சாஹல்.. இது என்ன புது மாதிரியான ஷாட்டா இருக்கே?

மும்பை : இந்திய கிரிக்கெட்டின் புது பாட்ஷாவாக உருவெடுத்து இருக்கிறார் சூர்யகுமார் யாதவ். கிரிக்கெட்டில் எப்போதுமே சில வீரர்கள் ஒரிரு ஆட்டங்களில் நன்றாக விளையாடி புஸ்வானம் போல் ஆகிவிடுவார்கள்.

இதற்கு யூசுப் பதான் போன்ற பல வீரர்களை முன் உதாரணமாக சொல்லலாம். ஆனால், தொடர்ந்து ஒரே மாதிரி அதிரடியாக விளையாடுபவர் காலத்தால் அழியாமல் இருப்பார்கள்.

அந்த வீரர்களுக்கு தான் தனி மரியாதை, பதவி கிடைக்கும். அந்த வகையில் சூர்யகுமார் இந்திய கிரிக்கெட் அணியின் புதிய கிங்காக திகழ்கிறார்.

 சூர்யகுமாரின் அதிரடி

சூர்யகுமாரின் அதிரடி

2011ஆம் ஆண்டு சூர்யகுமாரை பார்த்து ரோகித் சர்மா, அப்போதே கணித்து ட்வீட் செய்து இருந்தார். தற்போது அது நிஜமாகி வருகிறது. மற்ற பேட்ஸ்மேன்கள் திணறும் போது சூர்யகுமார் மட்டும் எப்படி அதிரடி காட்டுகிறார் தெரியுமா. ரொம்ப சிம்பிள், டி20 கிரிக்கெட்டில் பவர்பிளே முடிந்த உடன், ரன்கள் கொஞ்சம் வத்தி போகும்.

 குறிவைக்கும் சூர்யா

குறிவைக்கும் சூர்யா

பேட்ஸ்மேன்களும் பெரிய ஷாட்கள் ஆடாமல் சிங்கிள்ஸ், டபுள்ஸ் எடுப்பார்கள். அப்போது பவுலர்களும் கொஞ்சம் ஈஸியாக எடுத்து கொள்வார்கள். அந்த தருணத்தை பயன்படுத்தி கொள்ளும் சூர்யா கவுண்டர் அட்டாக்கை விளையாடுகிறார். இதனால் சாதாரணமாகவே பந்தவீசும் அணிக்கு பதற்றம் தொற்றி கொள்ளும்.

 வித்தியாசமான ஷாட்

வித்தியாசமான ஷாட்

இதனை கட்டுப்படுத்த பந்துவீச்சாளர்கள், கேப்டன் பல யுத்தியை கையாண்டு பில்டர்களை நிறுத்துவார்கள். அப்போது எங்கு பில்டர்கள் இல்லையோ, இல்லை பவுண்டரி எல்லை குறைவான தூரத்தில் இருக்கிறதோ, அதனை நோக்கி சூர்யகுமார் பந்தை அடிப்பார். உதாரணத்துக்கு நேற்றைய ஆட்டத்தில் கூட பில்டர்கள் இல்லாத இடத்தை பார்த்து அடிப்பதற்காக உருண்டு புரண்டு குட்டி கரணம் போட்டு, ஒரு பந்தை பவுண்டரிக்கு விரட்டுவார்.

 முத்தமிட்ட சாஹல்

முத்தமிட்ட சாஹல்

கிரிக்கெட்டை வெறும் பேட், பந்துக்கும் இடையிலான போட்டியை தாண்டி அதனை மூளைக்கான போட்டியாக மாற்றிவிட்டார் சூர்யா. கிட்டத்தட்ட செஸ் விளையாட்டு போல், எதிராளி என்ன செய்வான் என்பதை யூகித்து அதற்கு எப்படி பதிலடி தருவது என்பதை சரியாக செய்வதில் தான் சூர்யகுமாரின் வெற்றி இருக்கிறது. இதனால் தான் நேற்று சூர்யகுமார் பேட்டிங் செய்த பிறகு, சாஹல் அவருடைய கையை பிடித்து பாட்ஷாக்கு முத்தம் தருவது போல் கொடுத்தார். பாட்ஷாவும் மும்பை தான், சூர்யகுமாரும் மும்பை தான் என்பது கூடுதல் தகவல்.

Story first published: Sunday, January 8, 2023, 12:42 [IST]
Other articles published on Jan 8, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+