Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பவுண்டரி லைன் நகர்ந்ததுக்கு காரணம் கோலி தான்.. சூர்யகுமார் கேட்ச்சில் வெளியான உண்மை.. வீடியோ

பார்படாஸ் : டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை இந்திய அணி கைப்பற்றி கிட்டத்தட்ட 10 நாட்கள் ஆகப்போகிறது. ஆனால் இன்னும் இந்திய அணி t20 உலக கோப்பை வென்றதை சிலரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.

தினந்தோறும் ஒவ்வொரு சர்ச்சைகளை கிளப்பி வருகிறார்கள். குறிப்பாக சூரியகுமார் யாதவ் பிடித்த கடைசி ஓவர் கேட்ச் ஆட்டத்தின் போக்கையை தலைகீழாக மாற்றியது. இந்த கேட்ச் பிடிக்கப்பட்டபோது பவுண்டரி லைன் தள்ளி இருந்தது.

Suryakumar t20 world cup Virat kohli

இதனால் இதை சிக்ஸராக தான் கருத்தில் கொண்டிருக்க வேண்டும் என்று தென்னாப்பிரிக்க ரசிகர்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஒருவேளை அது சிக்ஸராக கணக்கிடப்பட்டிருந்தால் தென் ஆப்பிரிக்கா அணி வெற்றி பெற்றிருக்கும் என்றும் கூறி வருகின்றனர். இந்த நிலையில் சூர்யகுமார் கேட்ச் பிடிக்கும் போது தள்ளப்படவில்லை என்றும் அது அப்போதிலிருந்து நகர்ந்து தான் இருந்தது என்றும் பலரும் கூறி வந்தனர்.

மேலும் சூரிய குமார் யாதவ் கேட்ச் பிடித்த போது பார்வையாளர் ஒருவர் எடுத்த வீடியோவும் அவர் மீது எந்த தவறும் இல்லை என்பதை தெளிவாக காட்டியது. இந்த சூழலில் யாருமே நகர்த்தாமல் அந்த பவுண்டரி லைன் எவ்வாறு கொஞ்சம் தள்ளப்பட்டு இருந்தது என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த நிலையில் அதற்கான பதில் தற்போது கிடைத்திருக்கிறது.

இதற்கு காரணம் விராட் கோலி செய்த ஒரு செயல்தான். இறுதிப்போட்டியில் விராட் கோலி அபாரமாக விளையாடி ரன்களை சேர்த்தார். முதல் ஓவரில் விராட் கோலி 3 பவுண்டரிகளை அடித்தார். அதில் ஒரு பவுண்டரி நேராக அடிக்கப்பட்டது. அப்போது அந்த பௌண்டரியை தடுக்க சென்ற தென்னாப்பிரிக்க வீரர் எல்லை கோட்டை நகர்த்தி இருக்கிறார்.

ஆனால் அதையும் மீறி பந்து பவுண்டரி சென்று இருக்கிறது. இந்த இடத்தில் அந்த தென்னாப்பிரிக்கா வீரர் பவுண்டரி கோட்டை சரி செய்து இருக்க வேண்டும். ஆனால் அவர் சரி செய்யாமல் அப்படியே போய்விட்டார். இதன் காரணமாக தான் அந்த பவுண்டரி லைன் கொடு கொஞ்சம் தள்ளி இருந்ததாகவும்,இதனால் தான் சூரிய குமார் கேட்ச் பிடிக்கும் போது அது சிக்ஸராக மாறவில்லை என்றும் தெளிவாகி விட்டது. இதனால் விராட் கோலியின் அந்த ஒரு ஷாட்டும் தென்னாபிரிக்கா வீரர் பவுண்டரி லைனை சரிசெய்யாமல் போனதும் தான் இதற்கு காரணம் என்று தற்போது தெரியவந்துள்ளது.

Story first published: Monday, July 8, 2024, 20:19 [IST]
Other articles published on Jul 8, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+