
32 வயது
சூரியகுமார் யாதவ் தன்னுடைய பேட்டிங்கில் மைதானத்தின் அனைத்து பக்கத்திலும் சுழன்று அடிக்கும் திறமை மூலம் புகழ்பெற்றால் , சூரியகுமார் யாதவை ரசிகர்கள் 360 டிகிரி வீரர் என்று அழைக்க தொடங்கினர். சூரியகுமார் பார்ப்பதற்கு இளம் வயது வீரர் போல் தோன்றினாலும் அவருக்கு வயது 32 ஆகிவிட்டது. சூரியகுமார் குறித்து பேசிய ஹர்திக் பாண்டியா இரண்டு மூன்று ஆண்டுகள் அவர் தாமதமாக இந்திய அணிக்காக விளையாடுகிறார் .

ஆயிரம் ரன்கள்
சூர்யா இதற்கு முன்பே விளையாடி இருக்க வேண்டும் என்று கூறியிருந்தார். ஆனால் எப்போது வந்தோம் என்று முக்கியமில்லை எப்படி வந்தோம்! எப்படி செயல்படுகிறோம் என்பது தான் முக்கியம் என்பதற்கு சூரியகுமார் நல்ல உதாரணமாக திகழ்கிறார். நடப்பாண்டில் டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் விளாசிய வீரர் மற்றும் ஒரே ஆண்டில் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஆயிரம் ரன்களைக் கடந்த இரண்டாவது வீரர் என்ற பெருமையை அவர் படைத்திருக்கிறார்.

சாதனைக்கு வாய்ப்பு
தற்போது சூரியகுமார் யாதவ் 2022 ஆம் ஆண்டில் 29 போட்டிகளில் விளையாடி இருக்கிறார் .இதில் அவர் மொத்தம் 1040 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் ஒன்பது அரை சதமும் , ஒரு சதமும் அடங்கும். சராசரியாக சூரியகுமார் யாதவும் 43 ரன்களை அடித்திருக்கிறார். தற்போது இன்னொரு ஒரு சாதனைப் படைக்க சூரியகுமாருக்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
ஒரே ஆண்டில் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற சாதனையை தற்போது பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வான் வகித்து வருகிறார்.

286 ரன்கள் தேவை
அவர் கடந்த ஆண்டில் 1326 ரன்கள் அடித்திருந்தார். தற்போது சூரியகுமார் அவரைவிட 286 ரன்கள் பின் தங்கியுள்ளார். நட்பாண்டில் நியூசிலாந்துக்கு எதிரான மூன்று டி20 போட்டிகள் சூரியகுமார் விளையாடுகிறார் இந்த ஆண்டில் இதுதான் இந்தியாவுக்கு கடைசி டி20 தொடராகும் இதில் சூரியகுமார் யாரோ 256 ரன்களை அடித்தால் முகமது ரிஸ்வானின் சாதனையை அவரால் உடைக்க முடியும். நியூசிலாந்து மைதானங்கள் சுற்றளவில் சிறியது. இதனால் சூரியகுமார் ஒரு பெரிய இன்னிங்ஸை ஆடினால் உஸ்மானின் சாதனை முறியடிக்க ஓரளவுக்கு வாய்ப்பு இருக்கும்.


Click it and Unblock the Notifications