Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சூர்யகுமாரின் பக்கா பதிலடி.. 3வது டி20ல் இந்தியா அசத்தல் கம்பேக்.. வெஸ்ட் இண்டீஸை சாய்த்தது எப்படி?

செயிண்ட் கிட்ஸ்: வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான 3வது டி20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

இரு அணிகளும் மோதிய இந்த 3வது டி20 போட்டி நேற்று செயிண்ட் கிட்ஸில் உள்ள வார்னர் பார்க் மைதானத்தில் நடைபெற்றது.

இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார்.

முதல் இன்னிங்ஸ்

முதல் இன்னிங்ஸ்

இதனையடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் ஓப்பனிங் வீரர் பிராண்டன் கிங் 20 ரன்களுக்கு ஹர்திக் பாண்ட்யாவிடம் ஆட்டமிழந்தார். ஆனால் மற்றொரு தொடக்க வீரரான கெயில் மேயர்ஸ் இந்தியாவின் பந்துவீச்சுகளில் சிக்ஸர் மழை பொழிந்தார். 50 பந்துகளை சந்தித்த அவர் 8 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 73 ரன்களை சேர்த்தார்.

சாதூர்யமான திட்டம்

சாதூர்யமான திட்டம்

இதனால் சாதூர்யமாக செயல்பட்ட ரோகித் சர்மா, மறுமுனையில் உள்ள விக்கெட்களை அடுத்தடுத்து சரிக்க திட்டமிட்டார். அதன்படி கேப்டன் நிகோலஸ் பூரண் 22, ரோவ்மென் போவெல் 23, ஹெட்மெயர் 20 என அடுத்தடுத்து வெளியேற 20 ஓவர்களில் அந்த அணி 5 விக்கெட்கள் இழப்புக்கு 164 ரன்களை எடுத்தது.

ஓப்பனிங்கே அதிர்ச்சி

ஓப்பனிங்கே அதிர்ச்சி

இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணியில் தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. ஓப்பனிங் வீரர் ரோகித் சர்மா ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரி என விளாசி ஃபார்மில் நின்ற போது தீடீரென காயம் ஏற்பட்டு ரிட்டயர்ட் அவுட்டானார். மறுமுனையில் தூண் போன்று நிலைத்து நின்ற சூர்யகுமார் யாதவ் தன் மீதான விமர்சனங்களுக்கு பவுண்டரிகள் மூலம் பதிலடி கொடுத்தார்.

சூர்யகுமார் தந்த பதிலடி

சூர்யகுமார் தந்த பதிலடி

44 பந்துகளை சந்தித்த சூர்யகுமார் யாதவ் 8 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 76 ரன்கள் சேர்த்தார். அவருக்கு உறுதுணையாக ஆடிய ஸ்ரேயாஸ் ஐயர் 24 ரன்கள், ரிஷப் பண்ட் 33 ரன்களை அடித்தனர். இதனால் 19 ஓவர்களிலேயே இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 165 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 2 -1 என முன்னிலையும் பெற்றது.

Story first published: Wednesday, August 3, 2022, 6:49 [IST]
Other articles published on Aug 3, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+