Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

திடீரென்று தந்தை அனுப்பிய மெசேஜ்.. ஆச்சரியத்தில் உறைந்த சூர்யகுமார்.. இது கனவா? நிஜமா?

மும்பை : இந்திய கிரிக்கெட் அணியில் பல கஷ்டங்களைப் பெற்று தற்போது தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார் சூரியகுமார் யாதவ். கடந்த ஏழு ஆண்டுகளாக தனது திறமையை நிரூபித்தும் வாய்ப்பு கிடைக்காமல் தவித்து வந்த சூரியகுமார் வாழ்க்கையில் தற்போது வசந்த காலம் வீசி வருகிறது.

நடப்பாண்டில் 31 டி20 போட்டிகளில் விளையாடிய சூரியகுமார் யாதவ் 1164 ரன்கள் விளாசி இருக்கிறார். இதில் இரண்டு சதங்களும் அடங்கும். டி20 கிரிக்கெட்டில் ஒரே ஆண்டில் ஆயிரம் ரன்களுக்கு மேல் அடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையும் அவர் படைத்திருக்கிறார்.

இதேபோன்று தற்போது டி20 சர்வதேச பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலிலும் சூரிய குமார் யாதவ் முதலிடத்தில் இருக்கிறார்.

பரிசாக கருதுகிறேன்

பரிசாக கருதுகிறேன்

சூரியகுமாரின் இந்த அதிரடி ஆட்டத்திற்கு பரிசளிக்கும் விதமாக அவரை இந்திய டி20 அணியின் துணை கேப்டனாக பிசிசிஐ பதவி வழங்கியிருக்கிறது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சூரியகுமார் யாதவ், துணை கேப்டனாக நான் நியமிக்கப்படுவேன் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. கடந்த ஒரு ஆண்டாக நான் விளையாடிய ஆட்டத்திற்கு கிடைத்த பரிசாக இதை கருதுகிறேன்.

கனவா? நிஜமா?

கனவா? நிஜமா?

நிச்சயமாக இது எனக்கு ஒரு நல்ல விஷயம். துணை கேப்டனாக செயல்படுவது குறித்து நான் எதிர்பார்த்து காத்து இருக்கிறேன். இந்த செய்தியை கேட்டவுடன் ஒரு நிமிடம் கண்களை மூடி இது கனவா இல்லை நிஜமா என்று என்னை நான் சோதித்து பார்த்தேன்.என்னுடைய தந்தை தான் அணி அறிவிக்கப்பட்ட மெசேஜை எனக்கு அனுப்பினார்.

அறிவுரை

அறிவுரை

அவர் சமூக வலைத்தளத்தில் எப்போதுமே இருப்பார். இதனால் அணிவந்தவுடன் எனக்கு உடனே அனுப்பிவிட்டார். எனினும் துணை கேப்டன் பதவி வந்ததால் எந்த நெருக்கடியையும் அழுத்தத்தையும் ஏற்படுத்திக் கொள்ளாதே, பேட்டிங்கை மகிழ்ச்சியுடன் விளையாடு என்று எனக்கு அறிவுரை கூறினார். மும்பை அணிக்காக நானும் ஹர்திக் பாண்டியாவும் நிறைய முறை விளையாடி இருக்கிறோம் .எங்கள் இருவருக்கும் நல்ல உறவு இருக்கிறது.

நல்ல உறவு

நல்ல உறவு

நாங்கள் பேட்டிங் வரிசையிலும் ஒருவருக்கு பின் ஒருவர் தான் களம் இறங்குவோம் அதிக முறை ஒன்றாக பேட்டிங் செய்திருக்கிறோம். ஹர்திக் பாண்டியா ஒரு சிறந்த தலைவராக இருக்கிறார். ஐபிஎல் தொடரில் கூட அவர் எப்படி அணியை வழிநடத்தினார் என்று நாம் பார்த்திருக்கிறோம். ஹர்திக் பாண்டியா தலைமையில் கீழ் விளையாடுவதை நினைத்து நான் மகிழ்ச்சி அடைகிறேன் என்று சூரியகுமார் கூறியுள்ளார்.

Story first published: Thursday, December 29, 2022, 11:50 [IST]
Other articles published on Dec 29, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+