Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

2022ம் ஆண்டு ஐசிசி-ன் உயரிய விருது.. சூர்யகுமார், ஸ்மிருதி பரிந்துரை.. அசரவைக்கும் ரெக்கார்ட்-கள்!

மும்பை: சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வழங்கும் 2022ம் ஆண்டிற்கான சிறந்த கிரிக்கெட் வீரர் மற்றும் வீராங்கனைக்கான விருதிற்கு இந்தியாவின் சூர்யகுமார் யாதவ் மற்றும் ஸ்மிருதி மந்தனா பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

சமீப காலமாக ஐசிசி சார்பில் ஒவ்வொரு மாதத்திற்கும் சிறந்த வீரர், வீராங்கனைகளை தேர்வு செய்து விருது வழங்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில் தற்போது 2022ம் ஆண்டு முழுவதையும் பார்த்து விருதுகள் வழங்கப்படவுள்ளன.

இதில் டி20 கிரிக்கெட்டில் சிறந்து விளங்கியதாக சூர்யகுமார் யாதவ், ஜிம்பாப்வே ஆல்ரவுண்டர் சிகந்தர் ராசா, இங்கிலாந்து ஆல்ரவுண்டர் சாம் கரண் மற்றும் பாகிஸ்தான் விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வான் ஆகியோர் பரிந்துரைக்கப்பட்டிருக்கின்றனர்.

 சூர்யகுமார் ரெக்கார்ட்

சூர்யகுமார் ரெக்கார்ட்

இந்தாண்டு டி20 கிரிக்கெட்டில் யாருமே எதிர்பார்க்காத வகையில் ருத்ர தாண்டவம் ஆடியிருந்தார் சூர்யகுமார் யாதவ். அவர் இந்தாண்டில் மட்டும் 31 இன்னிங்ஸ்களில் விளையாடி 1164 ரன்களை குவித்துள்ளார். இதில் 9 அரைசதங்களும் ஒரு சதங்களும் அடங்கும். குறிப்பாக 2022ம் ஆண்டில் டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்களை அடித்தவர் என்ற பெருமையையும் சூர்யகுமார் யாதவ் தான் பெற்றுள்ளார்.

கேப்டன்சி பதவி

கேப்டன்சி பதவி

2019ம் ஆண்டு முதல் முறையாக இந்திய அணிக்கு அறிமுகமான சூர்யகுமார் யாதவ், 2022ம் ஆண்டின் மத்தியிலேயே நம்பர் 1 டி20 பேட்ஸ்மேனாக உருவெடுத்தார். இந்தாண்டு முடிவதற்குள்ளேயே இந்திய டி20 அணியின் துணைக்கேப்டனாகவும் நியமிக்கப்பட்டிருக்கிறார். அடுத்தாண்டு ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளிலும் கலக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்மிருதி மந்தனா

ஸ்மிருதி மந்தனா

இது ஒருபுறம் இருக்க, மகளிர் கிரிக்கெட்டில் இருந்து இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறார். 2022ம் ஆண்டில் 23 போட்டிகளில் விளையாடிய அவர், 594 ரன்களை குவித்துள்ளார். குறிப்பாக டி20 கிரிக்கெட்டில் 2500 ரன்களை கடந்துள்ளார். கடந்தாண்டிற்கான விருதையும் ஸ்மிருதி மந்தனா தான் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

யார் வெற்றியாளர்?

யார் வெற்றியாளர்?

4 வீரர், வீராங்கனைகள் வரை பரிந்துரைக்கப்பட்டுள்ள நிலையில், விரைவில் வெற்றியாளர் யார் என்பதை ஐசிசி அறிவிக்கும். இந்தியாவின் மிஸ்டர் 360 டிகிரி என்று அழைக்கப்படும் சூர்யகுமார் யாதவுக்கு தான் இந்த விருதை வெல்ல அதிக வாய்ப்புகள் உள்ளதாக தெரிகிறது. இதனால் ரசிகர்கள் அவரை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

Story first published: Thursday, December 29, 2022, 18:21 [IST]
Other articles published on Dec 29, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+