Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அடுத்தடுத்த உயரங்களை எட்ட தயாராகும் சூர்யகுமார்... மும்பை அணியோட கேப்டன்!

டெல்லி : சையத் முஸ்தாக் அலி கோப்பை டி20 தொடர் வரும் 10ம் தேதி துவங்கி 31ம் தேதி வரையில் நடைபெறவுள்ளது.

இதற்கான அணி தேர்வு நடைமுறைகள் நடைபெற்று வருகின்றன. பல்வேறு அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் மும்பை அணியும் அறிவிக்கப்பட்டுள்ளது. கேப்டனாக சூர்யகுமார் யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனவரி 10ம் தேதி துவக்கம்

ஜனவரி 10ம் தேதி துவக்கம்

சையத் முஸ்தாக் அலி கோப்பை டி20 தொடர் வரும் 10ம் தேதி துவங்கி 31ம் தேதிவரையில் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக உள்ளூர் போட்டிகள் நடத்தப்படாத நிலையில் தற்போது முஸ்தாக் அலி கோப்பை தொடர் நடைபெறவுள்ளது பல்வேறு தரப்பினரையும் மகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

தமிழ்நாட்டு அணி அறிவிப்பு

தமிழ்நாட்டு அணி அறிவிப்பு

இதற்கான அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டு அணியும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் கேப்டன் மற்றும் துணை கேப்டனாக தினேஷ் கார்த்திக் மற்றும் விஜய் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் நேற்றைய தினம் மும்பை அணியும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் கேப்டனாக சூர்யகுமார் யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார்.

மும்பை இந்தியன்ஸ் வீரர்

மும்பை இந்தியன்ஸ் வீரர்

கடந்த ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி சார்பில் விளையாடிய சூர்யகுமார் யாதவ் சிறப்பான ஆட்டங்களை ரசிகர்களுக்கு பரிசாக அளித்தார். ஆயினும் இவர் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடர்களில் தேர்ந்தெடுக்கப்படாதது பலரின் புருவங்களை உயர செய்தது. பல்வேறு விமர்சனங்களும் எழுந்தன.

கேப்டன் சூர்யகுமார் யாதவ்

கேப்டன் சூர்யகுமார் யாதவ்

இந்நிலையில் சையத் முஸ்தாக் அலி தொடரில் தற்போது மும்பை அணியின் கேப்டனாக சூர்யா நியமிக்கப்பட்டுள்ளார். 20 பேர் கொண்ட அணியில் தாரே, ஜெய்ஷ்வால், சர்ப்ராஸ் கான், சித்தேஷ் லாட், தூபே, ஷிப்மன் ரஞ்சானே, துஷார் தேஷ்பாண்டே, குல்கர்னி, அதர்வா அங்கோலேகர், ஷாம்ஸ் முலானி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

Story first published: Sunday, December 27, 2020, 15:28 [IST]
Other articles published on Dec 27, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+