Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரெண்டு பேருக்கும் பயம்னா என்னன்னே தெரியல... சிறப்பா ஆடியிருக்காங்க... கோலி பாராட்டு யாருக்கு?

அகமதாபாத் :இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான 4வது டி20 போட்டி நேற்றைய தினம் நடந்து முடிந்துள்ளது.

Recommended Video

அவங்க ரெண்டு பேருக்கும் பயம்னா என்னன்னே தெரியல.. VIrat Kohli பாராட்டு

இந்த போட்டியில் இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை தந்துள்ளது. சூர்யகுமார் யாதவ் 57 ரன்களை குவித்துள்ளார்.

இந்நிலையில், சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன் போலவே சிறப்பாக விளையாடியுள்ளதாகவும், இவர்கள் இருவருக்கும் பயமென்றால் என்னவென்றே தெரியவில்லை என்றும் விராட் கோலி பாராட்டு தெரிவித்துள்ளார்.

4வது டி20 போட்டி

4வது டி20 போட்டி

இந்தியா மற்றும் இங்கிலாந்த இடையிலான 4வது டி20 போட்டி அகமதாபாத்தின் நரேந்திர மோடி மைதானத்தில் நடந்து முடிந்துள்ளது. இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற்று தொடரை 2க்கு 2 என்ற கணக்கில் சமன் செய்துள்ளது. இதையடுத்து நாளை நடைபெறவுள்ள 5வது டி20 போட்டி முக்கியத்துவம் பெறுகிறது.

57 ரன்களை குவித்த யாதவ்

57 ரன்களை குவித்த யாதவ்

நேற்றைய போட்டியில் களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் 57 ரன்களை குவித்தார். கடந்த ரெண்டாவது போட்டியில் தனது அறிமுக போட்டியில் களமிறங்கிய சூர்யகுமார் யாதவிற்கு விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை. கடந்த 3வது போட்டியில் நீக்கப்பட்ட அவர், நேற்றைய 4வது போட்டியில் மீண்டும் களமிறங்கி விளையாடினார்.

கோலி பாராட்டு

கோலி பாராட்டு

இந்நிலையில் நேற்றைய போட்டியில் அவர் சிறப்பாக வளையாடியதாக பாராட்டு தெரிவித்துள்ள கேப்டன் விராட் அவருடைய ஆட்டம் விவரிக்க முடியாத வகையில் இருந்தததாக கூறியுள்ளார். கடந்த 2வது போட்டியில் இஷான் கிஷன் ஆடியதை போலவே சூர்யகுமாரின் ஆட்டமும் இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

பயமற்ற ஆட்டம்

பயமற்ற ஆட்டம்

மேலும் சூர்யகுமார் மற்றும் இஷான் கிஷன் இருவரும் பயமின்றி ஆட்டத்தை எதிர்கொள்வதாகவும் விராட் கோலி பாராட்டியுள்ளார். சூர்யகுமாரின் ஆட்டத்தை பார்த்து தான் திகைத்ததாகவும் அடுத்த போட்டி இந்திய அணிக்கு மிகவும் முக்கியமான போட்டி என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Story first published: Friday, March 19, 2021, 10:45 [IST]
Other articles published on Mar 19, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+