Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆஸி.க்கு எதிரான சாபத்தை உடைத்த சூர்யகுமார்.. ஒருநாள் கிரிக்கெட்டில் இதுவே 3வது முறை.. நீ கலக்கு தல!

மொஹாலி : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் சூரியகுமார் யாதவ் ஒரு சாபத்தை உடைத்து இருக்கிறார். 20 கிரிக்கெட்டில் நம்பர் ஒன் வீரராக சர்வதேச அளவில் விளங்கும் சூரிய குமார் யாதவ், ஒரு நாள் கிரிக்கெட்டில் தொடர்ந்து தடுமாறி வருகிறார்.

இதனால் உலக கோப்பையில் தமக்கு இடம் கிடைக்குமா கிடைக்காதா என்ற நிலைக்கு சூரிய குமார் யாதவ் தள்ளப்பட்டார்.குறிப்பாக ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடப்பாண்டில் நடைபெற்ற ஒரு நாள் தொடரில் சூரியகுமார் யாதவ் தொடர்ந்து மூன்று முறை டக் அவுட் ஆகி சோகமான சாதனையை படைத்தார்.

suryakumar yadav breaks the curse against australia and registered 3rd 50 in odi

அதன் பிறகு சூரிய குமாரின் இடமே கேள்விக்குறியானது. டி20 கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடும் சூரிய குமார் யாதவ் ஒரு நாள் கிரிக்கெட்டில் தடுமாறுவதற்கு காரணத்தை அவர் தான் கூற வேண்டும் என ராகுல் டிராவிட் கடுப்பாகி பேசினார்.இந்த நிலையில் உலககோப்பை தொடரில் சூரியகுமார் யாதவ், சேர்க்கப்பட்டாலும் அவருடைய இடம் இன்னும் உறுதியாகவில்லை. இந்த நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஏற்கனவே சூரிய குமார் யாதவ் தடுமாறுவதால் இன்றைய ஆட்டத்தில் அவர் என்ன செய்யப் போகிறார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்தது.

இந்த நிலையில் இஷான் கிஷன் ஆட்டம் இழந்தவுடன் இந்திய அணி 185 ரன்கள் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அப்போது ஆஸ்திரேலியாவின் கை ஓங்கி இருந்தது. இப்படி நெருக்கடியான கட்டத்தில் களமிறங்கிய சூரியகுமார் யாதவ் கோல்டன் டக் ஆகப் போகிறார் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை வழங்கினார். எப்போதும் போல் கூலாக விளையாடிய சூரியகுமார் யாதவ், கேஎல் ராகுலுடன் பார்ட்னர்ஷிப் அமைத்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.

ஒரு கட்டத்திற்கு மேல் அதிரடியை காட்டிய சூரியகுமார் யாதவும் ஐந்து பவுண்டரி, ஒரு சிக்சர் என விளாசினார். இதன் மூலம் 49 பந்துகளில் அரை சதம் எடுத்த நிலையில் சூரியகுமார் யாதவும் ஆட்டம் இழந்தார். சூரியகுமார் கே.எல் ராகுல் ஆகியோர் இணைந்து விளையாடியதால் தான் இன்று ஆஸ்திரேலியா அணியை இந்தியா தோற்கடிக்க முடிந்தது.

இதன் மூலம் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தொடர்ந்து டக்அவுட் ஆகி வந்த சூரியகுமார் யாதவும் தன்னுடைய சாபத்தை உடைத்து விட்டார்.அது மட்டுமல்லாமல் சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் மூன்றாவது முறையாக சூரியகுமார் யாதவ் இன்று அரை சதத்தை பூர்த்தி செய்துள்ளார்.

Story first published: Friday, September 22, 2023, 22:51 [IST]
Other articles published on Sep 22, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+