Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உங்க ஆளே சொல்லிட்டாரு! கிளம்புங்க! சூர்யகுமாரின் கேட்ச் சர்ச்சை.. பொலாக் கொடுத்த நெத்தியடி பதில்

மும்பை : டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்றதற்கு மிக முக்கிய காரணமாக சூரிய குமார் யாதவின் கேட்ச் அமைந்தது. தென்னாப்பிரிக்காவின் வெற்றிக்கு ஆறு பந்துகளில் 16 ரன்கள் தேவை என்ற நிலை இருந்தது.

அப்போது ஹர்திக் பாண்டியா பந்து வீசினார். முதல் பந்தை அதிரடி வீரர் டேவிட் மில்லர் தூக்கி சிக்ஸர் லைனுக்கு அடித்தார். அந்த பந்து சிக்ஸர் தான் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில் சூரியகுமார் யாரும் எங்கேயோ இருந்து ஓடி வந்து அந்த கேச்சை பிடித்தார்.

t20 world cup Suryakumar yadav catch

அப்போது சிக்சர் லைனில் காலை வைத்து விடுவோமோ என பயந்து பந்தை தூக்கி எறிந்து மீண்டும் தன்னை நிலை நிறுத்திக் கொண்டு அந்த கேட்சை நிறைவு செய்தார். இது ஆட்டத்தில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. இதன் மூலம் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அது மற்றும் சிக்ஸராக இருந்திருந்தால், இந்த போட்டியில் தென்னாபிரிக்கா வெற்றி பெற்றிருக்கும்.

இந்த நிலையில் தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் ரசிகர்கள் அது கேட்ச் கிடையாது என்றும்,அது சிக்ஸர் என்றும் குறை கூறி வந்தனர். எல்லைக்கோடு கொஞ்சம் நகர்த்தி வைக்கப்பட்டு இருந்ததாகவும் அந்த பவுண்டரி லைனில் அச்சு மைதானத்தில் இருந்ததாகவும் தென்னாப்பிரிக்கா ரசிகர்கள் கூறினர். இதில் சூரியகுமார் யாதவ் கால் வைத்ததால் நியாயமாக இது சிக்ஸர் என்று அறிவித்திருக்க வேண்டும் என்றும் அவர்கள் கூறினர்.

எனினும் இது நியாயமான கேட்ச் தான், என்றும் பந்தை தடுக்கும் போது பவுண்டரி லைன் நகர்ந்து இருந்தால் தான் அது அவுட் கிடையாது என்றும் இந்திய ரசிகர்கள் பதிலடி கொடுத்தனர். இந்த நிலையில் தென்னாபிரிக்க அணியின் முன்னாள் கேப்டன் பொலாரக், இதற்கு ஒரு தீர்ப்பை வழங்கியிருக்கிறார்.

இது குறித்து பேசிய அவர் சூரியகுமார் யாதவ் பிடித்த கேட்ச் சரியானது. அதில் எந்த தவறும் கிடையாது. ஆட்டத்தில் போக்கையே அந்த கேட்ச் மாற்றிவிட்டது. பவுண்டரி லைன் நகர்ந்து இருந்ததாக கூறுவது சரி கிடையாது. அது தெளிவான கேட்ச் தான். இதில் எந்த குறையும் கூற முடியாது என்று பதில் அளித்திருக்கிறார்கள். தற்போது பொலாக்கின் பேட்டியை வைத்து உங்க முன்னாள் கேப்டனே சொல்லிவிட்டார் இடத்தை காலி செய்து கிளம்புங்கள் என்று கிண்டல் அடித்து வருகின்றனர்.

Story first published: Monday, July 1, 2024, 18:51 [IST]
Other articles published on Jul 1, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+