Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்திய அணியில இடம்பெறும் எல்லா தகுதியும் அவருக்கு இருக்கு... கண்டிப்பா இடம்பெற்றிருக்கணும்!

டெல்லி :இந்திய அணியில் இடம்பெறும் அனைத்து தகுதிகளும் மும்பை இந்தியன்ஸ் அணி வீரர் சூர்யகுமார் யாதவிற்கு உள்ளதாக முன்னாள் மேற்கிந்திய தீவுகள் அணியின் கேப்டன் பிரையன் லாரா தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் 2020 சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணியின் சார்பில் விளையாடிய சூர்யகுமார் யாதவ், சிறப்பான தனது ஆட்டத்தின்மூலம் அனைவரையும் கவர்ந்துள்ளார்.

இந்நிலையில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரில் அவர் இடம்பெறாததற்கு காரணம் என்னவென்று தெரியவில்லை என்றும் ஆனால் அவர் கண்டிப்பாக இடம்பெற்றிருக்க வேண்டும் என்றும் லாரா குறிப்பிட்டுள்ளார்.

27ம் தேதி துவக்கம்

27ம் தேதி துவக்கம்

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் வரும் 27ம் தேதி துவங்கி 3 ஒருநாள், 3 டி20 மற்றும் 4 டெஸ்ட் போட்டிகளை கொண்ட 3 தொடர்களில் பங்கேற்று விளையாடவுள்ளன. இந்த தொடருக்கான அணி வீரர்கள் ஐபிஎல் தொடரின் இடையில் அறிவிக்கப்பட்ட நிலையில் மும்பை இந்தியன்ஸ் வீரர் சூர்யகுமார் யாதவ் அதில் இடம்பெறவில்லை.

ஏமாற்றம் அடைந்த சூர்யகுமார்

ஏமாற்றம் அடைந்த சூர்யகுமார்

இதுகுறித்து மனம் திறந்த சூர்யகுமார், தொடரில் இடம்பெறாததால் தான் ஏமாற்றம் அடைந்ததாகவும் மும்பை இந்தியன்ஸ் அணியின் ரோகித் சர்மாவின் ஆலோசனையின் காரணமாகவே அதிலிருந்து வெளிவந்ததாகவும் சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்திருந்தார்.

பிரையன் லாரா திட்டவட்டம்

பிரையன் லாரா திட்டவட்டம்

இந்நிலையில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரில் சூர்யகுமார் யாதவ் கண்டிப்பாக இடம்பெற்றிருக்க வேண்டும் என்று முன்னாள் மேற்கிந்திய தீவுகள் அணியின் கேப்டன் பிரையன் லாரா தெரிவித்துள்ளார். அதற்கான அனைத்து தகுதிகளும் அவருக்கு உள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.

நெருக்கடியை சமாளிப்பது முக்கியம்

நெருக்கடியை சமாளிப்பது முக்கியம்

ஒரு வீரர் ரன்களை குவிப்பதை மட்டுமே தான் கருத்தில் கொள்வதில்லை என்றும் மாறாக, தொழில்நுட்பம், நெருக்கடியான சூழல்களை சமாளிக்கும் திறமை, எந்த நிலைகளில் பேட்டிங் செய்கின்றனர் என்பது அனைத்தையும் தான் பார்ப்பதாகவும் அந்த வகையில் சூர்யகுமார் யாதவ் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக இவை அனைத்தையும் சிறப்பாக மேற்கொண்டதாகவும் லாரா கூறினார்.

சிறப்பான வீரர்

சிறப்பான வீரர்

மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ரோகித் சர்மா மற்றும் குவின்டன் டீ காக்கிற்கு அடுத்தபடியாக 3வது இடத்தில் ஆடிய சூர்யகுமார் யாதவ், நெருக்கடியான சூழலை சமாளிக்கும் திறன்மிக்க வீரர் என்றும் துவக்க ஆட்டக்காரர்களை விட 3வது இடத்தில் விளையாடுபவரே சிறப்பான வீரர் என்றும் லாரா குறிப்பிட்டுள்ளார்.

கண்டிப்பாக இடம்பெற்றிருக்க வேண்டும்

கண்டிப்பாக இடம்பெற்றிருக்க வேண்டும்

அந்த வகையில் மும்பை இந்தியன்ஸ் அணியின் சிறப்பான வீரர் சூர்யகுமார் யாதவ் என்றும், அவர் இந்திய அணிக்காக ஏன் தேர்வாகவில்லை என்பது குறித்து தெரியவில்லை என்றும் ஆனால் கண்டிப்பாக அவர் இடம்பெற்றிருக்க வேண்டும் என்றும் லாரா கூறினார்.

Story first published: Monday, November 23, 2020, 14:46 [IST]
Other articles published on Nov 23, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+