Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சூர்யகுமார் செய்த சோக சாதனை.. ஹாட்ரிக் கோல்டன் டக்.. இந்தியாவின் தோல்விக்கு முக்கிய காரணம் என்ன?

சென்னை : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் சூரியகுமார் யாதவ் முதல் பந்திலேயே கோல்டன் டக் ஆகி சோக சாதனை படைத்திருக்கிறார்.

டி20 தரவரிசை பட்டியலில் உலகில் முதல் நிலை வீரராக சூரியகுமார் யாதவ் விளங்குகிறார். கடந்த ஆண்டு இந்தியாவுக்காக டி20 போட்டியில் ஆயிரம் ரன்கள் அடித்து சூரியகுமார் சாதனை படைத்தார்.

நடப்பாண்டில் கூட தொடக்கத்தில் சூரியகுமார் யாதவ் டி20 போட்டியில் சதம் விளாசினார்.சூரியகுமார் யாதவ் சிறப்பாக விளையாடி வருவதால் அவருக்கு டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டியிலும் இடம் கிடைத்தது.

சோகமான சாதனை

சோகமான சாதனை

டெஸ்ட் போட்டியில் சூர்யகுமார் யாதவும் பெரிய தாக்கத்தை ஏதும் ஏற்படுத்தவில்லை. இதனால் அணியில் அவருடைய இடத்தை இழந்தார்.இதனை அடுத்து ஸ்ரேயாஸ் ஐயர் காயம் காரணமாக நடுவரிசையில் விளையாடாத நிலையில் சூரியகுமார் யாதவுக்கு இந்த தொடரில் வாய்ப்பு கொடுக்கப்பட்டது. இதில் சூரியகுமார் யாதவ் பெரியதாக சாதிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் சோகமான சாதனையை தான் செய்திருக்கிறார்.

 ஹாட்ரிக் கோல்டன் டக்

ஹாட்ரிக் கோல்டன் டக்

நடப்பு தொடரில் மூன்று போட்டியிலும் சூரியகுமார் யாதவ் முதல் பந்திலே கோல்டன் டக் ஆகி ரசிகர்களை விரக்தியில் ஆழ்த்தி இருக்கிறார். இதனால் சூரியகுமார் யாதவை இனி ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் சேர்க்கக்கூடாது என ரசிகர்கள் போர் கொடி தூக்கி வருகின்றனர். ஏற்கனவே வாய்ப்புக்காக சஞ்சு சாம்சன் காத்திருக்கும் நிலையில் சூரிய குமாரை தேவையில்லாமல் அணியில் சேர்த்து தற்போது அவருடைய நம்பிக்கையை சுக்குநூறாக இந்திய அணி நிர்வாகம் உடைத்து இருக்கிறது.

தோல்விக்கு காரணம்

தோல்விக்கு காரணம்

டெஸ்டுக்கு தனி வீரர்கள் ஒரு நாள் போட்டிக்கு தனி வீரர்கள் மற்றும் டி20 தனி வீரர்கள் என இந்திய அணியை தயார் செய்ய வேண்டும் என கிரிக்கெட் வல்லுனர்கள் கோரிக்கை விடுத்த நிலையில், ஒரே வீரரை மூன்று அணியிலும் சேர்ப்பது தவறாக பார்க்கப்படுகிறது. இந்திய அணி இன்றைய ஆட்டத்தில் 21 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவி இருக்கிறது.

தவறான முடிவு

தவறான முடிவு

இதில் சூரியகுமார் யாதவ் ஓரளவுக்கு நன்றாக விளையாடு இருந்தால் இந்திய அணி எளிதில் வென்று இருக்கும்.தொடர்ந்து பார்மில் இல்லாத ஒரு வீரரை வாய்ப்பு வழங்குகிறேன் என்ற பெயரில் இந்திய அணி தற்போது ஒரு தொடரையை இழந்து விட்டது. மேலும் சூரியகுமார் யாதவ் நம்பர் நான்காவது இடத்தில் களமிறக்காமல் கேஎல் ராகுல் அக்சர் பட்டேல் ஆகியோருக்கு ப்ரோமோஷன் கொடுத்ததும் தவறாக பார்க்கப்படுகிறது.

Story first published: Wednesday, March 22, 2023, 23:24 [IST]
Other articles published on Mar 22, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+