Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கேப்டன் பதவி பறிபோன உடன் ஸ்ரேயாஸ் உடன் சூர்யகுமார் மோதல்.. கூடவே அரங்கேறிய நெகிழ்ச்சி சம்பவம்

மும்பை: இந்திய டி20 கிரிக்கெட் அணியின் கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் நியமிக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே, முன்னாள் கேப்டன் சூர்யகுமார் யாதவ் அவரை நேரில் சந்தித்து கட்டிப்பிடித்து வாழ்த்திய நெகிழ்ச்சியான நிகழ்வு மும்பை டி20 லீக் போட்டியில் அரங்கேறியது. மேலும், இந்தப் போட்டியில் இருவருக்கும் இடையில் பேட்டிங் மோதலும் நடந்தது. அதில் ஸ்ரேயாஸ் ஐயர் வெற்றி பெற்றார்.

இந்திய டி20 அணியின் புதிய கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் நேற்று (ஜூன் 6) அறிவிக்கப்பட்டார். அதே நாளில் நடைபெற்ற மும்பை டி20 லீக் போட்டியில், சூர்யகுமார் யாதவ் தலைமையிலான 'டிரையம்ப் நைட்ஸ் எம்என்இ' மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் விளையாடிய 'சோபோ மும்பை ஃபால்கன்ஸ்' அணிகள் மோதின. டாஸின் போது பேசிய சூர்யகுமார் யாதவ், கேப்டன் பதவி பறிபோன ஏமாற்றத்தை வெளிக்காட்டாமல், தனது மும்பை சக வீரரான ஸ்ரேயாஸ் ஐயருக்கு மனதார வாழ்த்து தெரிவித்தார்.

Suryakumar Yadav Embraces and Congratulates Shreyas Iyer in Mumbai T20 League

சூர்யகுமார் யாதவ் பேசுகையில், "இந்திய டி20 அணியை வழிநடத்த ஸ்ரேயாஸ் ஐயருக்கு வாய்ப்பு கிடைத்ததற்காக நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். நாங்கள் மும்பைக்காக இணைந்து நிறைய போட்டிகளில் விளையாடியுள்ளோம். மிக முக்கியமாக, அடுத்தடுத்து மூன்று மும்பை வீரர்கள் (ரோஹித் சர்மா, சூர்யகுமார், ஸ்ரேயாஸ் ஐயர்) இந்திய டி20 அணிக்கு கேப்டனாக செயல்பட உள்ளோம் என்பது மும்பை கிரிக்கெட்டிற்கு கிடைத்த பெருமை" என்று கூறினார். போட்டி தொடங்குவதற்கு முன்பு இரு வீரர்களும் மைதானத்தில் ஒருவரையொருவர் கட்டிப்பிடித்து தங்களது அன்பைப் பகிர்ந்து கொண்டனர்.

இருவரின் அதிரடி ஆட்டம்

இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சூர்யகுமார் யாதவின் டிரையம்ப் நைட்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 147 ரன்கள் எடுத்தது. அதிரடியாக விளையாடிய சூர்யகுமார் யாதவ் 24 பந்துகளில் 3 பவுண்டரிகள், 4 சிக்சர்களுடன் 48 ரன்கள் எடுத்தார்.

இதனைத் தொடர்ந்து 148 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய சோபோ மும்பை ஃபால்கன்ஸ் அணிக்கு 'இம்பாக்ட் சப்ஸ்டிடியூட்டாக' களம் இறங்கிய ஸ்ரேயாஸ் ஐயர் அபாரமாக விளையாடினார். அவர் 36 பந்துகளில் 5 பவுண்டரிகள், 4 சிக்சர்களுடன் 61 ரன்கள் குவித்து தனது அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்தார்.

“வைபவ் சூர்யவன்ஷி சின்ன பையன் அதனால்..”.. பிசிசிஐ எடுத்த நெகிழ்ச்சியான முடிவு.. பெற்றோருடன் பயணம்

“வைபவ் சூர்யவன்ஷி சின்ன பையன் அதனால்..”.. பிசிசிஐ எடுத்த நெகிழ்ச்சியான முடிவு.. பெற்றோருடன் பயணம்

இந்திய அணியின் கேப்டன் பதவி மாற்றம் குறித்த விவாதங்களுக்கு மத்தியில், மும்பையின் இரு நட்சத்திர வீரர்களும் மைதானத்தில் காட்டிய நட்பு மற்றும் விளையாட்டு மாண்பு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.மேலும், சூர்யகுமார் யாதவை பேட்டிங்கில் முந்திய ஸ்ரேயாஸ் ஐயர் தனது அணியை வெற்றி பெறவும் வைத்தார்.

Story first published: Sunday, June 7, 2026, 10:35 [IST]
Other articles published on Jun 7, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+