Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“வருது.. வெகு சீக்கிரம் அது வருது”.. சூர்யகுமார் தந்த அட்டகாச அப்டேட்.. குஷியில் ரசிகர்கள்.. விவரம்!

மவுண்ட் மௌங்கனி: டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமாவது குறித்து சூர்யகுமார் யாதவ் கூறிய கருத்து ரசிகர்களுக்கு சுவாரஸ்யத்தை கொடுத்துள்ளது.

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் வாணவேடிக்கைகளை காட்டிய சூர்யகுமார் யாதவ், அதே ஃபார்மை நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரிலும் காட்டி வருகிறார்.

இரு அணிகளும் மோதிய 2வது டி20 போட்டியில் இந்திய அணி 65 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதற்கு மிக முக்கியமான காரணம் சூர்யகுமார் யாதவின் அதிரடி சதம் தான்.

சூர்யகுமார் யாதவ் சதம்

சூர்யகுமார் யாதவ் சதம்

51 பந்துகளை சந்தித்த சூர்யகுமார் யாதவ் 11 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்களுடன் 111 ரன்களை விளாசினார். சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அவர் அடிக்கும் 2வது சதம் இதுவாகும். இதன் மூலம் அதிக டி20 சதம் அடித்த இந்திய வீரர்கள் பட்டியலில் ரோகித் சர்மாவுடன் இணைந்தார். இதே போல அதிகமுறை டி20 கிரிக்கெட்டில் ஆட்ட நாயகன் வான்கிய வீரர் ( 7) என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

பேட்டிங் ரெக்கார்ட்

பேட்டிங் ரெக்கார்ட்

பேட்டிங்கில் அசத்தி வரும் சூர்யகுமார் யாதவ் இதுவரை 13 ஒருநாள் போட்டிகள் மற்றும் 41 டி20 போட்டிகளில் மட்டுமே ஆடியுள்ளார். ஒரு டெஸ்ட் போட்டியில் கூட இதுவரை விளையாடவே இல்லை. கடந்தாண்டு மார்ச் மாதம் தான் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானாலும், அதற்குள் நம்பர் 1 வீரராக உருவெடுத்துள்ளார். எனவே இவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் எப்போது களமிறங்குவார் என கேள்வி எழுந்து வருகிறது.

சூர்யகுமாரின் பதில்

சூர்யகுமாரின் பதில்

இந்நிலையில் அதற்கு அவரே பதில் கொடுத்துள்ளார். அதில், வருகிறது, அடுத்து டெஸ்ட் போட்டிக்கான தேர்வும் வருகிறது. நான் கிரிக்கெட் விளையாட தொடங்குவது டெஸ்ட் போட்டிகளின் மூலம் தான். மும்பை அணிக்காக நான் நிறைய போட்டிகளில் ஆடியுள்ளேன். எனவே எனக்கு டெஸ்ட் கிரிக்கெட் ஆடுவதிலும் அதிக ஆர்வம் இருக்கிறது. இதே போல சிறப்பாக ஆட சீக்கிரம் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கிறேன் எனக்கூறினார்.

கடந்த கால நினைவுகள்

கடந்த கால நினைவுகள்

தொடர்ந்து பேசிய அவர், நான் எப்போதுமே கடந்த காலத்தை நினைத்துப்பார்த்துக்கொண்டே இருப்பவன். ரூமில் இருக்கும்போது, பயணத்தின் போது, மனைவியுடன் பேசுகையில் என பல சமயங்களில், நான் 2 ஆண்டுக்கு முன் எப்படி இருந்தேன் என்பதை ஆலோசித்துக் கொண்டிருப்பேன். அதுதான் நான் அடுத்தகட்டத்திற்கு செல்லவும் உதவுவதாக சூர்யகுமார் யாதவ் கூறியுள்ளார்.

Story first published: Monday, November 21, 2022, 11:34 [IST]
Other articles published on Nov 21, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+