Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஓ இதுதான் ட்ரிப்பிளா திருப்பி குடுக்குறதா? சோதித்து பார்த்த நியூசி,.. சூர்யகுமார் தரமான பதிலடி!

அகமதாபாத்: நியூசிலாந்து அணியுடனான 3வது டி20 போட்டியில் இந்திய வீரர் சூர்யகுமார் யாதவுக்கு கிடைத்த மற்றொரு சூப்பர் பவரினால் இந்தியா வெற்றி கண்டதாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இரு அணிகளும் மோதிய கடைசி டி20 போட்டி அகமதாபாத்தில் நடைபெற்றது. இதில் இந்திய அணி 168 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுள்ளது. டி20 கிரிக்கெட்டில் இந்தியா பெறும் அதிக வித்தியாச வெற்றி இதுதான்.

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 234 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக சுப்மன் கில் 63 பந்துகளில், ராகுல் திரிபாதி 22 பந்துகளில் 126 ரன்களையும் விளாசினர்.

3வது டி20 போட்டி

3வது டி20 போட்டி

வழக்கமாக இந்திய அணிக்கு வாணவேடிக்கை காட்டும் சூர்யகுமார் யாதவ் 13 பந்துகளில் 24 ரன்களை அடித்திருந்த போது பிரேஸ்வெல் டைவ் அடித்து பிடித்த கேட்ச்-ஆல் துரதிஷ்டவசமாக வெளியேறினார். அவரை வீழ்த்தியதை போலவே நியூசிலாந்து அணிக்கு தனது ஃபீல்டிங்கால் பதிலடி கொடுத்தார். இந்த போட்டியில் மட்டும் சூர்யகுமார் 3 அத்க ரிஸ்க் கேட்ச்-களை பிடித்தார். அந்த 3 கேட்ச்-களும் தான் ஆட்டத்தையே புரட்டிப்போட்டது.

தரமான பதிலடி

தரமான பதிலடி

முதல் ஓவரின் ஹர்திக் பாண்ட்யா வீசிய அவுட்சைட் ஆஃப் பந்தை நியூசிலாந்தின் ஓப்பனிங் வீரர் ஃபின் ஆலன் கட் ஷாட் ஆட முயன்றார். ஆனால் அந்த பந்து எட்ஜாகி ஸ்லிப் திசையில் நின்றிருந்த சூர்யகுமார் யாதவின் தலைக்கு மேல் அதிவேகமாக சென்றது. எனினும் அதனை பிடித்துவிட நினைத்த அவர், டைமிங்கில் எகிறி பிடித்து அசத்தினார். இதே சம்பவம் அப்படியே 3வது ஓவரிலும் நடந்தது.

2வது கேட்ச்

2வது கேட்ச்

இந்த முறை சற்று ஷார்ட் லெந்தாக போடப்பட்ட பந்தை, க்ளென் பிலிப்ஸ் தூக்கி அடிக்க முயன்றார். அவர் எதிர்பார்த்ததை போலவே பந்து தேர்ட் மேன் திசையில் பவுண்டரிக்கு தான் சென்றிருக்க வேண்டும். ஆனால் சூப்பர் மேனை போல அங்கு வந்த சூர்யகுமார் யாதவ் டைவிங் கேட்ச்-சால் பேட்ஸ்மேனுக்கு அதிர்ச்சியை அளித்தார். நம்ம சூர்யகுமாரா இது என ரசிகர்களை வியக்கவைத்தது மிட்செல் சாண்ட்னரின் விக்கெட் தான்.

 ஷாக் ஆன சாண்ட்னர்

ஷாக் ஆன சாண்ட்னர்

ஷிவம் மாவி வீசிய ஷார்ட் பிட்ச் பந்தை நியூசிலாந்து கேப்டன் சாண்ட்னர் சிக்ஸருக்கு ஓங்கி விளாசினார். அனைவரும் எதிர்பார்த்தை போலவே பந்து அழகாக பவுண்டரி எல்லைக்கு அருகில் சென்றது. சாண்ட்னரும் நிம்மதி பெருமூச்சு விட்டார். ஆனால் கடைசி நேரத்தில் கோட்டிற்கு மிக அருகில் இருந்து சூர்யகுமார் நேர்த்தியாக ஒரு கேட்ச்- ஐ பிடித்திருந்தார். ஏய் எப்புட்றா என்பது போல நம்பவே முடியாமல் சாண்ட்னர் வருத்தத்துடன் சென்றார்.

Story first published: Thursday, February 2, 2023, 8:14 [IST]
Other articles published on Feb 2, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+