Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்த முறை மிஸ் ஆகாது.. பாண்ட்யா குறித்து சூர்யகுமார் கூறிய தகவல்..பயிற்சி ஆட்டத்தின் முடிவே இப்படியா

கொழும்பு: இலங்கை அணிக்கு எதிரான தொடருக்காக பாண்ட்யா-வின் பந்துவீச்சு அசுரத்தனமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்தியா ஏ அணி 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடுகிறது.

இரு அணிகளும் மோதும் முதல் ஒருநாள் போட்டி வரும் ஜூலை 13ம் தேதி தொடங்குகிறது.

இலங்கை சுற்றுப்பயணம்

இலங்கை சுற்றுப்பயணம்

இந்த போட்டிக்கு தயாராகும் விதமாக இந்திய அணி வீரர்கள் நேற்று இண்ட்ரா ஸ்குவாட் பயிற்சி போட்டியில் ஈடுபட்டனர். இதில் ராகுல் டிராவிட் பயிற்சி தர இளம் வீரர்கள் ருத்ராஜ் கெயிக்வாட், மணிஷ் பாண்டே, சூர்யகுமார் யாதவ் உள்ளிட்டோர் சிறப்பாக செயல்பட்டுள்ளனர். வீரர்கள் பயிற்சியை தொடங்கியுள்ள நிலையில் இந்திய அணியின் ப்ளேயிங் 11 குறித்த கேள்விகள் எழத்தொடங்கியுள்ளன. குறிப்பாக அதிரடி வீரர் ஹர்த்திக் பாண்ட்யா அணியில் இடம்பெறுவாரா என்ற கேள்வி உலா வருகிறது.

மறுக்கப்பட்ட வாய்ப்பு

மறுக்கப்பட்ட வாய்ப்பு

இதற்கு காரணம் பாண்ட்யாவின் பந்துவீச்சு தான். கடந்த 2019ம் ஆண்டு காயத்தால் பாதிக்கப்பட்ட பாண்ட்யா அறுவை சிகிச்சைக்கு பிறகு பந்துவீச்சில் ஈடுபடவில்லை. ஐபிஎல் தொடரில் ஒரு ஓவரை கூட அவர் வீசவில்லை. இங்கிலாந்துக்கு எதிரான போட்டியிலும் சில ஓவர்களையே அவர் வீசினார். அவரால் பந்துவீச்சில் ஈடுபட முடியவில்லை என்ற காரணத்திற்காகவே இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது.

சூர்யகுமார் நம்பிக்கை

சூர்யகுமார் நம்பிக்கை

வரவிருக்கும் இலங்கை தொடர், இந்திய அணியில் அவரின் எதிர்காலத்தை நிர்ணயிக்க கூடியதாகும். இந்நிலையில் அவர் பழைய மாதிரியே மீண்டும் பந்துவீசுவதாக சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலிய தொடர், ஐபிஎல் தொடர்களில் பந்துவீச்சில் ஈடுபடவில்லை தான். எனினும் இங்கிலாந்து தொடரில் பாண்ட்யா சிறப்பாக பந்துவீசினார். தற்போது இண்ட்ரா ஸ்குவாட் போட்டியில் மிகச்சிறப்பாக வீசியுள்ளார். ஆனால் இந்திய அணி நிர்வாகம் தான் அவரின் ஃபார்ம் குறித்து முடிவெடுக்க வேண்டும். ஆனால் என்னைப்பொறுத்தவரை அவரிடம் நல்ல நம்பிக்கை தெரிகிறது எனக்கூறியுள்ளார்.

கடைசி வாய்ப்பு

கடைசி வாய்ப்பு

டி20 உலகக்கோப்பை தொடைரில் தேர்வாவதற்கு இலங்கை தொடர் தான் ஹர்த்திக் பாண்ட்யாவுக்கு இருக்கும் முக்கிய வாய்ப்பாகும். எனவே தனது இடத்தை விட்டுக்கொடுத்துவிட கூடாது என்பதற்காக நிச்சயம் அதிரடி காட்டுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ரசிகர்களும் அவரின் பழைய ஆட்டத்தை காண காத்துள்ளனர்.

Story first published: Tuesday, July 6, 2021, 19:11 [IST]
Other articles published on Jul 6, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+