சூர்யகுமார் யாதவுக்கு ஜாக்பாட்.. அடுத்த இந்தியா - பாக். போட்டியில் மெகா வாய்ப்பு.. இதை கவனித்தீர்களா?
துபாய்: பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாமை வீழ்த்தி மிகப்பெரிய பெருமையை பெறவதற்கு சூர்யகுமார் யாதவுக்கு வாய்ப்பு உருவாகியுள்ளது.
Recommended Video
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி சிறப்பாக விளையாடி வருகிறது.
கடைசியாக நடைபெற்ற ஹாங்காங் போட்டியில் சூர்யகுமார் மற்றும் விராட் கோலி அமைத்த 98 ரன்கள் பார்ட்னர்ஷிப் சிறப்பான வெற்றியை தேடிக்கொடுத்தது.
பாகிஸ்தான் மற்றும் ஹாங்காங் அணிகளை வீழ்த்தியதால் சூப்பர் ஃபோர் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

ஆசிய கோப்பை
இந்திய அணியுடன் மோதப்போகும் மற்றொரு அணி எது என்பது இன்னும் உறுதியாகவில்லை. இன்று நடைபெறும் கடைசி லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் ஹாங்காங் அணிகள் மோதுகின்றது. இந்த போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெறுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதால், பெரும்பாலும் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் தான் ஞாயிற்றுக்கிழமை மோதிக்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பெரும் சாதனை
இந்நிலையில் இந்த போட்டியில் இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் முக்கிய சாதனையை படைக்க காத்துள்ளார். ஐசிசி டி20 பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் தான் கடந்த ஓராண்டுகளாக முதலிடத்தில் இருந்து வருகிறார். முகமது ரிஸ்வான் 2வது இடத்தில் இருக்கிறார். ஆனால் அவர்கள் இருவரையும் முந்தி முதலிடத்தை சூர்யகுமார் யாதவ் பிடிக்கலாம்.

எத்தனை புள்ளிகள் தேவை
பாபர் அசாம் தற்போது வரை 818 புள்ளிகளுடன் இருக்கிறார். இவரை தொடர்ந்து முகமது ரிஸ்வான் 796 புள்ளிகளுடன் 2வது இடத்திலும், சூர்யகுமார் யாதவ் 792 புள்ளிகளுடன் 3வது இடத்திலும் இருக்கிறார். எனவே இன்னும் ஒரு போட்டியில் சிறப்பாக விளையாடினால் கூட முதலிடத்தை பிடித்துவிடுவார்.

புள்ளி எப்படி கணக்கிடுவது?
தரவரிசைப்பட்டியலில் பேட்ஸ்மேன்களின் புள்ளிகளை கணக்கிடுவதற்கு சில முறைகள் உள்ளன. அதாவது, முதலில் பேட்டிங் செய்வதை விட, சேஸிங்கில் ஒரு வீரருக்கு அதிக புள்ளிகள் கிடைக்கும். இதே போல அணி சிக்கலில் இருக்கும் போது அரைசதம் அல்லது சதம் அடித்தால் அதிக புள்ளிகளை பெறலாம்.


Click it and Unblock the Notifications