ஒன் மேன் ஆர்மியான சூர்யகுமார்.. மொத்தமாக ஏமாற்றிய ஸ்டார் வீரர்கள்.. போராடி ரன் குவித்த இந்தியா?
பெர்த்: தென்னாப்பிரிக்க அணியுடனான போட்டியில் இந்திய அணி கடும் போராட்டத்திற்கு பிறகு சவாலான இலக்கை கொடுத்துள்ளது.
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் இன்று தொடரில் இந்தியா - தென்னாப்பிரிக்க அணிகள் மோதி வருகின்றன. இந்த போட்டி பெர்த்-ல் உள்ள மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.

தொடக்கமே ஷாக்
தொடக்க வீரர்கள் கே.எல்.ராகுல் மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் சிக்ஸர்கள் மற்றும் பவுண்டரிகளை அடித்து சிறப்பாக தொடங்கினர். ஆனால் சிறிது நேரம் கூட அது நீடிக்கவில்லை. கே.எல்.ராகுல் 9 ரன்களுக்கும், கேப்டன் ரோகித் சர்மா 15 ரன்களுக்கும் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர். வழக்கம் போல விராட் கோலி காப்பாற்றுவார் என எதிர்பார்த்ததும் வீணானது.

மிடில் ஆர்டரும் சொதப்பல்
அதிரடியாக 2 பவுண்டரிகளை விளாசிய விராட் கோலி துரதிஷ்டவசமாக பவுண்டரி எல்லையில் கேட்ச் கொடுத்து 12 ரன்களுக்கெல்லாம் அவுட்டானார். மிடில் ஆர்டரில் வாய்ப்பு பெற்ற தீபக் ஹுடா டக் அவுட்டும், நம்பிக்கை நாயகனான ஹர்திக் பாண்ட்யா 2 ரன்களுக்கும் வெளியேறியனர். இதனால் 49 ரன்களுக்கெல்லாம் 5 விக்கெட்களை இழந்து இந்தியா திணறியது.

சூர்யகுமார் யாதவின் போராட்டம்
அப்போது தூண் போல மறுமுணையில் நின்ற சூர்யகுமார் யாதவ் ஒன் மேன் ஆர்மியாக தென்னாப்பிரிக்க பவுலிங்கை பொளந்துக்கட்டினார். ஒருபுறம் விக்கெட்கள் சரிய மறுபுறம் அதிரடி காட்டிய சூர்யகுமார் 40 பந்துகளில் 6 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 68 ரன்களை விளாசினார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்கள் இழப்புக்கு 133 ரன்களை இந்திய அணி குவித்தது.

கடுப்படுத்தலாமா?
ஆஸ்திரேலியாவிலேயே அதிக வேகத்தை கொண்ட பிட்ச் பெர்த் தான். இங்கு நேரம் போக போக வேகம் அதிகரித்துக்கொண்டே இருக்கும். எனவே முதல் இன்னிங்ஸை விட 2வது இன்னிங்ஸில் இன்னும் பேட்டிங் செய்வது கடினம். இதனை பயன்படுத்தி இந்திய அணி வெற்றி பெறும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர்.


Click it and Unblock the Notifications