வரிசையாக சிக்ஸ் பறக்க விட்ட சூர்யகுமார்..அரண்டு போன ஆஸி.. அதன்பின் நடந்த அந்த சம்பவம்
இந்தூர் : சூர்யகுமார் யாதவ் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான் ஒருநாள் போட்டியில் ஒரே ஓவரில் வரிசையாக நான்கு சிக்ஸர்களை பறக்க விட்டார்.
இந்தியா - ஆஸ்திரேலியா இடையே ஆன இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங் செய்தது.

துவக்க வீரர் சுப்மன் கில் 104 ரன்கள் அடித்தார். மூன்றாம் வரிசையில் களமிறங்கிய ஸ்ரேயாஸ் ஐயர் 105 ரன்கள் சேர்த்தார். இவர்கள் இருவரும் சதம் அடித்த பின் இஷான் கிஷன் 18 பந்துகளில் 31 ரன்கள் குவித்து, அதன் பின் ஆட்டமிழந்தார்.
ஆடுகளம் பேட்டிங் செய்ய ஒத்துழைத்ததால் கே ரல் ராகுல் மற்றும் சூர்யகுமார் யாதவ் அதிரடி ஆட்டம் ஆட முடிவு செய்தனர். ராகுல் 38 பந்துகளில் 58 ரன்கள் எடுத்தார். அவருடன் பேட்டிங் செய்த போது சூர்யகுமார் யாதவ் கேமரான் கிரீன் வீசிய 44வது ஓவரில் அந்த சம்பவத்தை செய்தார்.
அந்த ஓவரின் முதல் நான்கு பந்துகளை சிக்ஸராக அடித்தார். சூர்யகுமார் யாதவ்வின் இயல்பான ஆட்டமே இதுதான். ஒருநாள் போட்டிகளில் இந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் திணறிய அவர் அதை நிறைவு செய்தார்.
சூர்யகுமார் யாதவ் நான்கு சிக்ஸ் அடித்த உடன் ஆஸ்திரேலிய அணி மிரண்டு போனது. கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், கேமரான் கிரீனை அழைத்து நீண்ட நேரம் பேசினார். ஆனால், ரசிகர்கள் பொறுமை இழந்து சூர்யகுமார் சிக்ஸரை பார்க்க வேண்டும் என்ற நோக்கில் கூச்சல் இட்டனர். இது யாரும் எதிர்பாராத சம்பவமாக அமைந்தது. அப்போது மைதானம் முழுவதும் எழுந்து நின்றே விட்டார்கள்.
அதன் பின் கிரீன் வீசிய பந்தில் சூர்யகுமார் யாதவ் 1 ரன் எடுத்தார். அந்த ஓவரில் அவர் 6 சிக்ஸ் அடிக்க முடியாமல் போனது. அதன்பின் அவர் 24 பந்துகளில் அரைசதம் கடந்து தன் அதிரடி ஆட்டத்தை தொடர்ந்தார்.
ஒருநாள் போட்டிகளில் ஒரே ஓவரில் தொடர்ந்து நான்கு சிக்ஸ் அடித்த இந்திய வீரர்கள் பட்டியலில் மூன்றாவதாக இணைந்தார் சூர்யகுமார் யாதவ். முன்னதாக கென்யாவிற்கு எதிராக ஜாகிர் கான் மற்றும் இலங்கைக்கு எதிராக ரோஹித் சர்மா இந்த சாதனையை செய்துள்ளனர்.


Click it and Unblock the Notifications