Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஏலியன் சூர்யகுமார் 3வது டி20 சதம்.. இலங்கைக்கு எதிராக வாண வேடிக்கை.. இமாலய இலக்கை எட்டிய இந்தியா

ராஜ்கோட் : இலங்கைக்கு எதிரான 3வது டி20 போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் சூர்யகுமார் ரசிகர்களுக்கு வாண வேடிக்கை காட்டினார்.

3 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வென்ற நிலையில், தொடரை தீர்மாணிக்கும் கடைசி ஆட்டம் இன்று ராஜ்கோட்டில் நடைபெற்றது.

இன்றைய ஆட்டத்தில் கூட பனிப்பொழிவு அதிகம் இருப்பதால் டாஸ் வெல்லும் அணி முதலில் பந்துவீச்சு செய்யும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஹர்திக் பாண்டியா பேட்டிங் செய்து மீண்டும் ஒரு ஷாக் கொடுத்தார்.

ராகுல் திரிபாதி அதிரடி

ராகுல் திரிபாதி அதிரடி

தொடக்க வீரராக களமிறங்கிய இஷான் கிஷன் 1 ரன்னில் ஆட்டமிழக்க இந்தியாவுக்கு ஆரம்பமே ஏமாற்றத்தை கொடுத்தது. இதனையடுத்து ராகுல் திரிபாதி மற்றும் சுப்மான் கில் ஜோடி சேர்ந்து அணியை சரிவிலிருந்து மீட்டனர். குறிப்பாக ராகுல் திரிபாதி கவுண்டர் அட்டாக் ஆட்டத்தை வெளிப்படுத்தி, இலங்கைக்கு நெருக்கடி அளித்தார்.

சூர்யகுமார் ஸ்பெஷல்

சூர்யகுமார் ஸ்பெஷல்

வெறும் 16 பந்துகளை மட்டுமே எதிர்கொண்ட ராகுல் திரிபாதி 35 ரன்களை விளாசினார். இதில் 5 பவுண்டரிகளும், 2 சிக்சர்களும் அடங்கும். எதிர்பாராத விதமாக ராகுல் திரிபாதி ஆட்டமிழக்க, களத்திற்கு வந்த சூர்யகுமார் தனது ருத்ரதாண்டவம் ஆடினார். ஒரு கட்டத்தில் எப்படி போட்டாலும் அடிக்கும் மோடுக்கு சூர்யகுமார் செல்ல, ரன்கள் ராக்கெட் வேகத்தில் வென்றது.

பறந்த சிக்சர்கள்

பறந்த சிக்சர்கள்

மறுபுறம் சப்மான் கில், கேஎல் ராகுலின் தம்பி போல் விளையாடி ரன்களை சேர்த்தார். இதனால் அவருக்கும் சேர்த்து சூர்யகுமார் யாதவ் விளையாடினார். 26 பந்துகளில் அரைசதம் கடந்த சூர்யகுமார் யாத்வ், பிறகு மகீஷ் தீக்சணா ஓவரில் 2 சிக்சர், பவுண்டரி அடித்து 19 ரன்கள் சேர்த்தார்.

3வது டி20 சதம்

3வது டி20 சதம்

இதன் பிறகு தனது டிரெட் மார்க் ஷாட்களை சூர்யகுமார் ஆடி, மைதானத்தின் 360 டிகிரியிலும் சூர்யகுமார் அடித்தார். மறுபுறம் சுப்மான் கில், கேப்டன் ஹர்திக் பாண்டியா, தீபக் ஹூடா ஆகியோர் வந்த வேகத்தில் செல்ல, சூர்யகுமார் யாதவ் மட்டும் அபாரமாக விளையாடி 45வது பந்தில் தனது 3வது சதத்தை பூர்த்தி செய்து அசத்தினார்.51 பந்துகளில் 112 ரன்கள் சூர்யகுமார் அடித்தார். அக்சர் பட்டேல் 9 பந்துகளில் 21 ரன்கள் எடுத்தார். இதனால் 20 ஓவர் முடிவில் இந்திய அணி 228 ரன்கள் எடுத்தது.

Story first published: Saturday, January 7, 2023, 20:44 [IST]
Other articles published on Jan 7, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+