
ஏமாற்றம்
தொடர்ந்து இரண்டு போட்டிகளிலும் ஸ்ரேயாஸ் ஐயர் அரை சதம் விளாசினார். இதனால் இந்திய அணியில் அவரது இடம் கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. ஆனால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சூரியகுமார் யாதவ் ஒரு நாள் போட்டியில் தொடர்ந்து சொதப்பி வருவது ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளிக்கிறது .

சொதப்பல் ஆட்டம்
இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் சூரியகுமார் யாதவ் சதம் விளாசினார். அதன் பிறகு அவர் பெரிதாக எந்த ரன்களையும் அடிக்கவில்லை. கடைசியாக நடைபெற்ற ஐந்து ஒருநாள் போட்டிகளில் அவர் ஒரே ஒரு முறை மட்டும் தான் 20 நன்களை கடந்துள்ளார் .குறிப்பாக பலம் குன்றிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக சூரியகுமார் யாதவ் 13 மற்றும் 9 ரன்கள் மட்டுமே அளித்துள்ளார்.

கடைசி வாய்ப்பு
இதற்கு முன்பு இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் 27 மற்றும் 16 ரன்கள் மட்டுமே சூரியகுமார் அடித்திருந்தார்.இதனால் கிடைக்கும் வாய்ப்பை சூரியகுமார் யாதவ் ஒரு நாள் கிரிக்கெட்டில் வீணடித்து வருவது ரசிகர்களை ஏமாற்றம் அடையச் செய்துள்ளது .இதனால் வெஸ்ட் இண்டீஸ் எதிரான கடைசி ஒரு நாள் போட்டியே சூரியகுமார் யாதவுக்கு கடைசி வாய்ப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Recommended Video

ஜடேஜாவின் இடம்
இதில் சூரியகுமார் யாதவ் பெரிதாக சாதிக்கவில்லை என்றால் சீனியர்கள் அணிக்கு திரும்பும் போது அவரது இடம் கேள்விக்குறியாகி விடும் என கருதப்படுகிறது. நாளைய போட்டிகளில் ஜடேஜா பிளேயிங் லெவனுக்குள் வந்தால் அக்சர் பட்டேல் இடம் காலியாகும் என கருதப்பட்டது. ஆனால் அவர் கடைசி போட்டியில் சிறப்பாக விளையாடியதால் தற்போது சூரியகுமார் இடத்துக்கு தான் ஆபத்து வரும் என கருதப்படுகிறது.


Click it and Unblock the Notifications











