சூர்யகுமாருக்கு காயம்.. ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறினார்.. டி20 உலக கோப்பை தொடருக்கும் சந்தேகம்
மும்பை: ஐபிஎல் தொடரிலிருந்து சூர்யகுமார் யாதவ் மீண்டும் காயம் காரணமாக வெளியேறினார். இது மும்பை அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
ஐபிஎல் தொடருக்கு முன்பே கையில் ஏற்பட்ட காயம் காரணமாக சூர்யகுமார் இலங்கைக்கு எதிரான தொடரில் களமிறங்கவில்லை.
கடந்த பிப்ரவரி 22ஆம் தேதி முதல் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் தங்கி 3 வாரம் சூர்யகுமார் பயிற்சியில் ஈடுபட்டார்.

நடப்பு சீசனில் சூர்யா
இதன் காரணமாக ஐபிஎல் தொடரின் முதல் ஒரு வாரத்தில் சூர்யகுமார் பங்கேற்கவில்லை. நடப்பு சீசனில் மும்பை அணியின் 3வது போட்டியில் தான், பிளேயிங் லெவனில் சூர்யகுமார் பங்கேற்றார். வெறும் 8 போட்டியில் மட்டுமே விளையாடியுள்ள சூர்யகுமார் யாதவ், 303 ரன்களை குவித்துள்ளார். அவரது சராசரி 43 மற்றும் ஸ்ட்ரைக் ரேட் 142ஆகும்.

ஏன் பங்கேற்கவில்லை?
கடந்த 6ஆம் தேதி குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சூர்யகுமார் யாதவ் 11 பந்துகளில் 13 ரன்கள் எடுத்தார். அந்த போட்டியில் விளையாடிய போது, அவருக்கு மீண்டும் காயம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, பிசிசிஐயின் மருத்துவ குழு, சூர்யகுமாரை ஆய்வு செய்து, அவரை ஓய்வில் இருக்க அறிவுறுத்தியது. இதனால் தான் சூர்யகுமார் நேற்றைய ஆட்டத்தில் பங்கேற்கவில்லை.

மருத்துவர்கள் அறிவுறுத்தல்
இந்த நிலையில், ஐபிஎல் தொடரிலிருந்து சூர்யகுமார் மீண்டும் விலகுவதாக மும்பை அணி அறிவித்துள்ளது. இனி பிளே ஆஃப் வாய்ப்பு இல்லை என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. சூர்யகுமாருக்கு கையில் 2வது முறையாக காயம் ஏற்பட்டுள்ளதால், அவருக்கு அறுவை சிகிச்சை தேவைப்படுமா என்று மருத்துவர்கள் சோதிக்க உள்ளனர்.

டி20 உலககோப்பை
ஒரு வேலை, அப்படி தேவைப்பட்டால் டி20 உலககோப்பை தொடரில் சூர்யாவால் பங்கேற்க முடியாது. இதனால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்ற சூழல் வந்தால், அதனை தள்ளி போட வேண்டும் என்பதை தவிர வேறு வழியே இல்லை. இதனிடையே, களத்துக்கு விரைவில் திரும்புவேன் என்று சூர்யகுமார் யாதவ் ரசிகர்களுக்கு நம்பிக்கை அளித்துள்ளார்.


Click it and Unblock the Notifications