Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐசிசி டி20 தரவரிசை.. இரண்டே நாளில் சூர்யகுமாரின் முதலிடம் போச்சு..பாக் வீரர் கடும் சவால்

துபாய் : சர்வதேச டி 20 கிரிக்கெட்டில் பேட்டிங் தரவரிசையில் சூரியகுமார் யாதவ் கடந்த அக்டோபர் மூன்றாம் தேதி முதல் இடத்தை பிடித்து அசத்தியிருக்கிறார்.

சூரியகுமார் யாதவ், கடைசியாக விளையாடிய டி20 போட்டிகளில் ஹாட்ரிக் அரை சதம் அடித்து அசத்தினார்.

இதனால் சூர்யகுமார் யாதவ் இரண்டாவது இடத்திலிருந்து முதல் இடத்திற்கு முன்னேறினார்.

சூர்யகுமார் யாதவ்

சூர்யகுமார் யாதவ்

எனினும் நேற்றைய ஆட்டத்தில் அவர் 8 ரன்களில் ஆட்டம் இழந்ததால் தற்போது மீண்டும் தனது முதல் இடத்தை அவர் தவற விட்டிருக்கிறார். இதன் மூலம் சூர்ய குமார் யாதவ் டி20 கிரிக்கெட்டில் முதலிடத்தை பிடித்த மூன்றாவது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றிருக்கிறார். தற்போது வெளியிடப்பட்டுள்ள புதிய பட்டியலில் முகமது ரிஸ்வான் 854 புள்ளிகள் உடன் முதல் இடத்தில் இருக்கிறார்.

மற்ற இந்திய வீரர்கள்

மற்ற இந்திய வீரர்கள்

சூரியகுமார் யாதவ் 838 புள்ளிகள் உடன் இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். இதன் மூலம் இரண்டே நாளில் மட்டும் சூரியகுமாக முதலிடத்தில் நீடித்திருக்கிறார். சூரியகுமார் தவிர வேற எந்த இந்திய வீரரும் முதல் 10 இடத்தில் இல்லை. கே எல் ராகுல் 14-வது இடத்திலும், விராட் கோலி 15 வது இடத்திலும், ரோகித் சர்மா 16 வது இடத்திலும் உள்ளனர் .

பந்துவீச்சாளர்கள் பட்டியல்

பந்துவீச்சாளர்கள் பட்டியல்

இதேபோன்று தென்னாப்பிரிக்காவில் குயின்டன் டி காக் 8 இடங்கள் முன்னேறி பன்னிரண்டாவது இடத்திலும், நேற்றைய ஆட்டத்தில் சதம் விளாசிய ரூசோவ் 23 இடங்கள் முன்னேறி 20 இடத்திலும், அதிரடி வீரர் டேவிட் மில்லர் 10 இடங்கள் முன்னேறி 29-வது இடத்திலும் உள்ளனர். பந்துவீச்சாளர்களுக்கான பட்டியலில் ஆஸ்திரேலிய வீரர் ஹேசல்வுட் முதலிடத்தில் இருக்கிறார்.

அஸ்வின் முன்னேற்றம்

அஸ்வின் முன்னேற்றம்

ரஷித் கான் இரண்டாவது இடத்திலும், அசரங்கா மூன்றாவது இடத்திலும் உள்ளனர் இந்திய பவுலர்கள் யாரும் முதல் 10 இடத்தில் இல்லை. 12-வது இடத்தில் புவனேஸ்வர் குமார் உள்ளார். தமிழக வீரர் அஸ்வின் 28 இடங்கள் முன்னேறி 20 வது இடத்தை பிடித்துள்ளார். ஆல்ரவுண்டர்களுக்கான பட்டியலில் ஹர்திக் பாண்டியா ஒரு இடம் பின்தங்கி ஐந்தாவது இடத்தில் இருக்கிறார்.

Story first published: Wednesday, October 5, 2022, 19:06 [IST]
Other articles published on Oct 5, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+