Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பரம எதிரி.. ஈகோவை தூக்கி வீசிவிட்டு இறங்கி வந்த கோலி.. இந்திய அணியில் இடம்பிடிக்கும் ஐபிஎல் புயல்!

சென்னை: இங்கிலாந்து அணிக்கு எதிரான டி 20 தொடரில் இந்திய அணியில் இளம் வீரர் ஒருவர் சேர்க்கப்பட உள்ளார். ஐபிஎல் தொடரில் கோலியுடன் மோதிய இளம் வீரருக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கும் என்கிறார்கள்.

ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்காக ஆடி வரும் வீரர் சூர்ய குமார் யாதவ். 32 வயதாகும் இவர் இந்திய அணியில் இடம்பிடிக்க தீவிரமாக போராடி வருகிறார்.

முதல் தர போட்டிகளில் சிறப்பாக ஆடியும் கூட கோலி இவரை தொடர்ந்து புறக்கணித்து வருகிறார். இதன் காரணமாக கடந்த ஐபிஎல் செமி பைனல் போட்டியில் கோலிக்கு சூர்யகுமாருக்கும் இடையில் கடுமையான உரசல் கூட ஏற்பட்டது.

உரசல்

உரசல்

களத்திலேயே இரண்டு பேரும் உரசிக்கொண்டனர். இதன் பின் நடந்த ஆஸ்திரேலிய தொடரில் சூரியகுமார் யாதாவிற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. கோபம் காரணமாக கோலி இவரை புறக்கணித்துவிட்டார் என்று செய்திகள் வந்தது. அதன்பின் கோலியை அடிக்கடி பாராட்டி சூர்யகுமார் யாதவ் அவரை சமாதானம் செய்தார்.

பெங்களூர்

பெங்களூர்

இந்த நிலையில் தற்போது சூர்ய குமார் யாதவ் மும்பை அணியின் விஜய் ஹசாரே கோப்பைக்காக தொடரில் பயிற்சி மேற்கொள்ளவில்லை. மும்பை அணியுடன் இவர் இணையவில்லை. இவர் தற்போது பெங்களூரில் யோ யோ டெஸ்டில் கலந்து கொண்டு இருக்கிறார்.

ஆட மாட்டார்

ஆட மாட்டார்

இதனால் இவர் விஜய் ஹசாரே கோப்பையில் ஆட மாட்டார் என்பது உறுதியாகி உள்ளது. இதன் காரணமாக இவர் கண்டிப்பாக இந்திய அணியில் டி 20 டீமில் இணைவார் என்று கூறுகிறார்கள். ஐபிஎல் ஸ்டார்கள் வருண் சக்ரவர்த்தி, இஷான் கிஷான் ஆகிய வீரர்களும் இதேபோல் வாய்ப்பை பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தேர்வு

தேர்வு

இவர்கள் எல்லோரும் ஒன்றாக பெங்களூரில் பயிற்சி மேற்கொண்டு வருகிறார்கள். இங்கிலாந்துக்கு எதிராக மார்ச் 12ம் தேதி டி 10 தொடர் தொடங்க உள்ளது. இதில் இவர்கள் ஆட வாய்ப்புள்ளது. கோலி இவர்களை தேர்வு செய்ய போகிறார் என்று கூறப்படுகிறது .

 பயிற்சி

பயிற்சி

இதற்காகவே இவர்கள் பயிற்சி மேற்கொண்டு வருகிறார்கள். இந்திய அணியில் டி 20 தொடரில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக ஷ்ரேயாஸ் ஐயர் , சஞ்சு சாம்சன் மிடில் ஆர்டரில் ஆடினார்கள். ஆனால் இவர்கள் இருவரும் சரியாக ஆடவில்லை.

சஞ்சு சாம்சன்

சஞ்சு சாம்சன்

சஞ்சு சாம்சனாவது அதிரடியாக ஆடினார். ஆனால் ஷ்ரேயாஸ் பெரிய அளவில் நம்பிக்கை அளிக்கவில்லை. இதனால் அவர்களுக்கு பதிலாக தற்போது சூர்யகுமார், இஷான் கிஷான் ஆகிய இரண்டு பேரும் இந்திய அணியில் இடம்பிடிப்பார்கள் என்று கூறப்படுகிறது.

Story first published: Wednesday, February 10, 2021, 16:08 [IST]
Other articles published on Feb 10, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+