Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கஷ்ட காலம் எல்லாம் கொஞ்ச நாள் தான்.. சூர்யகுமாருக்கு பிசிசிஐ கொடுக்க போகும் வாய்ப்பு.. செம ஹேப்பி

மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் சூர்யகுமார் நீண்ட நாளாக எதிர்பார்த்த வாய்ப்பு, கௌரவம் அவருக்கு கிடைக்க உள்ளது.

சூர்யகுமார் யாதவ், உள்ளூர் கிரிக்கெட், ரஞ்சி போட்டி மற்றும் ஐபிஎல் போட்டியில் சிறப்பாக விளையாடியும், அவருக்கு 7 ஆண்டுகளாக இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை.

இது குறித்து பேசிய சூர்யகுமார் யாதவ், இப்போது கடின காலம் மாறிவிட்டது. என் வாழ்க்கை சூழலும் மாறிவிட்டது. இப்போது கூட நாங்கள் முன்பு எப்படி இருந்தோம் என்பது குறித்து தான் மனைவியுடன் பேசுவேன் என்றார்.

வீரர்களின் கனவு

வீரர்களின் கனவு

இந்த நிலையில், கிரிக்கெட் வீரர் ஒருவருக்கும் தங்களது நாட்டுக்காக Pure கிரிக்கெட் என்று அழைக்கப்படும் டெஸ்ட் போட்டியில் ஒரு முறையாவது களமிறங்க வேண்டும் என்பது தான் கனவாக இருக்கும். தோனி, கோலி, ரோகித் ஆகியோர் கூட, ஒருநாள் போட்டியில் வாய்ப்பு கிடைத்தாலும், தங்களுடைய கனவு டெஸ்ட் போட்டியில் விளையாடுவது தான் என்று கூறியுள்ளனர்.

சூர்யகுமாரின் பேச்சு

சூர்யகுமாரின் பேச்சு

இதே கனவுடன் தான் சூர்யகுமார் யாதவ் உள்ளார். இரு தினங்களுக்கு முன்பு கூட, தாம் டெஸ்ட் போட்டியில் இந்தியாவுக்காக விளையாட ஆர்வமாக உள்ளேன் என்றும், அந்த நாட்கள் விரைவில் வரும் என்று நம்புவதாக கூறினார். நாம் ஒரு விசயத்திற்காக எண்ணம், உடல், பொருள், ஆவி என அனைத்திலும் அந்த குறிகோளாக உழைத்தால், இந்த பிரப்பஞ்சமே அதை நமக்கு தரும் என்று சான்றோர்கள் சொல்வார்கள்.

சூர்யகுமாருக்கு வாய்ப்பு

சூர்யகுமாருக்கு வாய்ப்பு

தற்போது சூர்யகுமாரின் விசயத்தில் அது உண்மையாகிவிட்டது. வங்கதேச தொடரில் இடம்பெற்றிருந்த ஜடேஜாவுக்கு காயம் இன்னும் குணமாகவில்லையாம். இதனால் ஜடேஜா வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள், டெஸ்ட் போட்டியில் பங்கேற்பது கேள்விக்குறியாகி விட்டது. இதனால் அந்த இடத்திற்கு சௌரப் குமார் மற்றும் சூர்யகுமார் யாதவ் தான் இடம்பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிசிசிஐ அங்கீகாரம்

பிசிசிஐ அங்கீகாரம்

சூர்யகுமார் யாதவ் ஒருநாள், டி20 போட்டியில் சிறப்பாக விளையாடி வருவதால், அவரை அங்கீகரிக்கும் வகையில் டெஸ்ட் போட்டியில் வாய்ப்பு கொடுக்க பிசிசிஐ முடிவு எடுத்துள்ளதாக தெரிகிறது. எனினும் இந்தியா தொடர்ந்து அனைத்து விதமான போட்டியில் விளையாடி வருவதால் டெஸ்ட்க்கு என தனி அணியை உருவாக்குவதே சரியாக இருக்கும் என்று கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Story first published: Wednesday, November 23, 2022, 16:04 [IST]
Other articles published on Nov 23, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+