கோலி பண்ண ஸ்லெஜிங்.. ஐஸ்கிரீம்க்குள் சிக்கன்.. சூரியகுமார் யாதவ் வெளியிட்ட ரகசிய தகவல்
மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் சூர்யகுமார் யாதவ் விராட் கோலி குறித்து வெளியிட்ட தகவல், இணையத்தை கலக்கி வருகிறது.
ரஞ்சி கிரிக்கெட்டில் சாதித்தாலும், ஐபிஎல் மூலம் புகழ் பெற்று இந்திய அணியில் இடம் பிடித்தவர் சூர்யகுமார் யாதவ்.
நடுவரிசையில் களமிறங்கி பேட்டிங்கில் கலக்கும் அவர், தனது கிரிக்கெட் வாழ்க்கையில் நடைபெற்ற சுவாரஸ்ய சம்பவங்கள் குறித்து தற்போது பேட்டி அளித்துள்ளார்.

கோலி ஸ்லேஜிங்
அதில், கடந்த ஐபிஎல் சீசன் தொடரில் பெங்களூருக்கு எதிராக மும்பை அணியில் விளையாடிய ஆட்டம் என்னால் மறக்க முடியாதவை. அந்த ஆட்டத்தில் நன்றாக விளையாடி அணிக்கு வெற்றியை தேடி தந்தேன். அப்போது ஒரு மறக்க முடியாத சம்பவம் நிகழ்ந்தது. விராட் கோலி என்னை ஸ்லேஜிங் செய்தார்.

படபடவென்ற இதயம்
அப்போது விராட் கோலி என்னை நோக்கி வந்தார். நான் வெளியே கெத்தாக நிற்பது போல் இருந்தாலும், என் இதயம் படபடவென்று துடித்தது. நான் எனக்குள்ளே பேசினேன், விராட் பாய், தயவு செய்து என்னை ஏதும் சொல்லாதீங்க பிளீஸ் என்று சொல்லி கொண்டேன்.ஆனால் நல்ல வேலை என்னை அவர் ஏதும் சொல்லவில்லை. அருகில் வந்து பந்தை மட்டும் பார்த்துவிட்டு போய்விட்டார்.

ஐஸ்கிரீம் சிக்கன்
இதே போன்று இந்திய அணியில் இருக்கும் போது இஷான் கிஷன், ரிஷப் பண்ட் அடிக்கும் லுட்டியை தாங்கவே முடியாது. எனக்கு பிரெட்டில் ஐஸ் கிரீம் தடவி, அதற்குள் சிக்கன் வைத்து எனக்கு தருவார்கள். நான் அதை சாப்பிட்டால் தான் ரன் அடிக்க முடியும் என்று கூறிவிடுவார்கள். அதற்காகவே நான் சாப்பிடுவேன்.

கலாட்டா
எனக்கு மிகவும் பிடித்த வீரர் என்றால் இஷான் கிஷன் தான். அவருடன் சேர்ந்து தான் எப்போதும் பயிற்சி செய்ய விருப்பபடுவேன். நாங்கள் இருவரும் பேட்டிங் செய்யும் போது கிரிக்கெட் தவிர மற்ற விசயங்கள் குறித்து பேசி கொள்வோம். இன்று வெற்றி பெற்றால் ஐஸ்கிரீம் வாங்கி சாப்பிடுவோம் என்று பிளான் செய்து விளையாடுவோம்.


Click it and Unblock the Notifications