Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சூர்யகுமாரின் அடிப்படையே தப்பா இருக்கு.. பலவீனத்தை வெளிக்காட்டிய லயான்.. ஒரே பந்தில் நிலை குலைந்தார்

நாக்பூர் : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 3 இந்திய வீரர்களின் ஆட்டம் பெரும் ஏமாற்றத்தை ரசிகர்களுக்கு உண்டாக்கியது. தொடர்ந்து சிறப்பாக விளையாடி வரும் சுப்மன் கில்லுக்கு வாய்ப்பு வழங்கப்படாமல் கேஎல் ராகுலுக்கு இந்திய அணி நிர்வாகம் வாய்ப்பு வழங்கியது.

இதே போன்று நடுவரிசையில் சூர்யகுமார் யாதவ்க்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. அது ரோகித் சர்மா எடுத்த தவறான முடிவாக பார்க்கப்படுகிறது. ஏற்கனவே ரஞ்சி கிரிக்கெட்டில் வாய்ப்புக்காக சர்பிராஸ் கான் போன்ற வீரர்கள் காத்துள்ளார்.

ஆனால், அவருக்கு வாய்ப்பு வழங்காமல் சூர்யாவுக்கு விளையாட தேர்வுக்குழு அணியில் இடம் கொடுத்தது. இது தவறான முடிவு என்று பலரும் கூறிய நிலையில், ரோகித் அனைத்தையும் நிராகரித்தார்.

ரோகித் சர்மா தவறு

ரோகித் சர்மா தவறு

சூர்யகுமார் டி20 கிரிக்கெட்டில் டாட் பிராட்மேன் போல் சிறப்பாக விளையாடி வருகிறார். ஆனால் ஒருநாள் கிரிக்கெட்டில் அவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. டி20 கிரிக்கெட்டில் நன்றாக விளையாடுகிறார் என்ற காரணத்திற்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட வாய்ப்பு வழங்குவது என்பது பெரும் தவறு என்பதை ரோகித்தே இன்று உணர்ந்திருப்பார்.

 எது சரியான முறை

எது சரியான முறை

எப்போதும், ரஞ்சி போன்ற உள்ளூர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சிறப்பாக விளையாடி அசத்தும் வீரர்களுக்கு தான்அணியில் இடம் கொடுக்க வேண்டுமே தவிர, ஐபிஎல் போன்ற தொடரில் நன்றாக விளையாடுவார்களுக்கு டெஸ்ட் கிரிக்கெட்டில் வாய்ப்பு வழங்க கூடாது.இது தான் கிரிக்கெட்டின் நீதி.

குழப்பத்தில் சூர்யகுமார்

குழப்பத்தில் சூர்யகுமார்

சூர்யகுமார் போன்ற வீரர்கள் ரஞ்சி கிரிக்கெட்டில் நன்றாக விளையாடி இருக்கலாம். ஆனால் அவர் கடைசியாக 5 ஆண்டுகளில் 12 ரஞ்சி போட்டிகளில் தான் விளையாடி இருக்கிறார். அப்படி இருக்க எதன் அடிப்படையில் அவர் டெஸ்ட் அணியில் தேர்வு செய்யப்பட்டார் என்று கேள்வி எழுந்துள்ளது. அதிரடியாக விளையாடும் திறமையை கொண்டுள்ள சூர்யகுமார், தற்போது டெஸ்டில் அதிரடியாக ஆடுவது இல்லை பொறுமை காப்பதா என்ற குழப்பத்தில் இருக்கிறார்.

கணிக்க தவறினார்

கணிக்க தவறினார்

இன்றைய ஆட்டத்தில் கூட நாதன் லயான் வீசிய பந்து நன்றக திரும்பி , அவருடைய ஸ்டம்பை பதம் பார்த்தது. ஆனால், சூர்யகுமார் அதனை கணிக்க தவறி டிரைவ் ஆட முயற்சித்தார். அதிரடி வீரராக அறியப்பட்ட பாகிஸ்தான் வீரர் ஆப்ரிடி கூட டெஸ்ட் கிரிக்கெட்டில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியா போன்ற நாடுகளில் பல கிரிக்கெட் வீரர்கள் வாய்ப்புக்காக காத்துள்ளனர். பிரித்வி ஷா, சர்பிராஸ் கான், பிரியாங் காஞ்சால், அபிமன்யூ ஈஸ்வரன் போன்ற வீரர்களை தேர்வுக்குழு பயன்படுத்தலாம்.

Story first published: Friday, February 10, 2023, 17:57 [IST]
Other articles published on Feb 10, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+