Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“உள்ளூர் டெஸ்ட் ஆடத் தயாராக இருக்கிறேன்”.. இந்திய அணியில் வாய்ப்பு இல்லாததால் சூர்யகுமார் கோரிக்கை

மும்பை: இந்திய டி20 அணியின் முன்னாள் கேப்டன் சூர்யகுமார் யாதவ், சர்வதேச போட்டிகளில் ஆடும் வாய்ப்பு இல்லாததால் உள்ளூர் டெஸ்ட் தொடரில் விளையாட தயாராக இருப்பதாகவும் தன்னை அணியில் சேர்க்குமாறும் மும்பை அணி நிர்வாகத்துக்கு தகவல் அனுப்பி இருக்கிறார்.

2026 ஐபிஎல் தொடருக்குப் பிறகு எந்தவொரு அதிகாரப்பூர்வ கிரிக்கெட் போட்டியிலும் விளையாடாமல் இருந்த சூர்யகுமார் யாதவ், தற்போது மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட்டிற்குத் திரும்புகிறார். வரும் அக்டோபர் 11-ஆம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்கும் சண்டிகர் அணிக்கு எதிரான முதல் ரஞ்சி போட்டியில் அவர் களமிறங்குவார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Suryakumar Yadav Returns to Domestic Cricket in Ranji Trophy After Dropped from Indian Team

சூர்யகுமார் யாதவுக்கு தற்போது 36 வயது ஆகிறது. கேப்டனாக 2026 டி20 உலகக்கோப்பை வென்று கொடுத்த அவருக்கு அதன் பின் இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. 2026 ஐபிஎல் தொடரிலும் அவர் பெரிதாக ரன் குவிக்கவில்லை. இனி சர்வதேச போட்டிகளில் ஆட வாய்ப்பு இல்லை என்ற நிலையில் திடீரென ரஞ்சி தொடரில் தான் விளையாடத் தயாராக இருப்பதாக மும்பை கிரிக்கெட் சங்கத் தலைவர் அஜிங்க்யா நாயக்கிடம் சூர்யகுமார் தெரிவித்து இருக்கிறார்.

சூர்யகுமார் கடைசியாக 2025 பிப்ரவரியில் விதர்பா அணிக்கு எதிராக ரஞ்சி போட்டியில் விளையாடியிருந்தார். இதுவரை 86 முதல்தர போட்டிகளில் விளையாடியுள்ள இவர், 14 சதங்கள் மற்றும் 30 அரைசதங்களுடன் 42.33 சராசரியில் 5758 ரன்கள் குவித்துள்ளார். இவரது வருகை மும்பை அணியின் நடுவரிசை பேட்டிங்கிற்கு கூடுதல் பலம் சேர்க்கும். ஆனால், ஓராண்டாக டெஸ்ட் போட்டிகளில் ஆடாத அவர் ஃபார்மில் இருப்பாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

அதேசமயம் மும்பை அணியின் முன்னாள் கேப்டனும் ஆல்ரவுண்டருமான ஷர்துல் தாக்கூர் காயம் காரணமாக முதல் சில போட்டிகளில் விளையாட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வலைப்பயிற்சியின் போது ஆயுஷ் மாத்ரே அடித்த பந்து தாக்கியதில் ஷர்துல் தாக்கூரின் கையில் காயம் ஏற்பட்டுள்ளது.

உலகக்கோப்பை வாய்ப்பே போய்விடும்.. சிராஜை முடக்கி வைக்க நினைக்கும் பிசிசிஐ.. பின்னணி என்ன?

உலகக்கோப்பை வாய்ப்பே போய்விடும்.. சிராஜை முடக்கி வைக்க நினைக்கும் பிசிசிஐ.. பின்னணி என்ன?

கடந்த சீசனில் 6 போட்டிகளில் விளையாடி 13 விக்கெட்டுகளையும், 130 ரன்களையும் எடுத்திருந்த ஷர்துல் விலகியுள்ளது மும்பை அணிக்குப் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. அவரது இடத்தில் வேகப்பந்து வீச்சை துஷார் தேஷ்பாண்டே முன்னின்று வழிநடத்துவார் எனத் தெரிகிறது.

Story first published: Monday, October 5, 2026, 8:03 [IST]
Other articles published on Oct 5, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+