For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஓ.. இது தான் அதிரடிக்கு காரணமா? சூர்யகுமார் சொன்ன வெற்றி ரகசியம்.. டிராவிட் கொடுத்த டிப்ஸ்

ராஜ்கோட் : இந்திய கிரிக்கெட் அணியின் சூப்பர் ஸ்டார் ஆக சூரியகுமார் யாதவ் விளங்குகிறார். கடந்த ஆறு மாதத்தில் மட்டும் மூன்று முறை டி20 கிரிக்கெட்டில் சதம் விளாசி சூரியகுமார் யாதவ் அசத்தியிருக்கிறார்.

அது மட்டுமல்ல தொடக்க வீரர் அல்லாமல் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் மூன்று சதம் அடித்த ஒரே வீரர் என்ற பெருமையும் அவர் படைத்திருக்கிறார்.

நேற்றைய ஆட்டத்தில் கூட மற்ற வீரர்கள் சற்று தடுமாறினாலும் ராகுல் திரிபாதி, சூரியகுமார் யாதவ் மட்டும்தான் அதிரடியாக விளையாடினார்கள். இந்த வெற்றியின் ரகசியம் என்ன என்பது குறித்து சூரியகுமார் யாதவிடம் ஹர்ஷா பொக்ல கேள்வி கேட்டார்.

எண்ணற்ற உழைப்பு

எண்ணற்ற உழைப்பு

அதற்கு அவர் அளித்த பதில்களை தற்போது பார்க்கலாம். நான் பயிற்சி செய்யும் போது எனக்குள்ளே நான் ஒரு நெருக்கடியை ஏற்படுத்திக் கொள்வேன். வெறுமண பயிற்சி செய்வதற்கு பதில் நமக்கு நாமே ஒரு அழுத்தத்தை ஏற்படுத்திக் கொண்டு பயிற்சி செய்தால் போட்டியில் விளையாடும் போது நமக்கு சுலபமாக இருக்கும். இப்படி விளையாடுவதற்கு பின்னால் எண்ணற்ற உழைப்பு இருக்கிறது.

பவுண்டரி அளவு

பவுண்டரி அளவு

கடினமாக உழைத்தால் தான் இது சாத்தியமாகும். பயிற்சி செய்யும்போது நமக்கு முழு திருப்தி ஏற்பட வேண்டும். நம்முடைய ஆட்டம் என்ன என்பது நமக்கு தெரியும். அதற்கு ஏற்றார் வகையில் திட்டத்தை ஏற்படுத்த வேண்டும். மைதானத்தில் சுற்றளவை தெரிந்து கொண்டு எங்கு குறைவான தூரத்தில் பவுண்டரி இருக்கிறதோ அந்த திசையை பார்த்து நான் ரன் அடிக்க முயற்சி செய்வேன். சில சமயத்தில் நான் விளையாடும் போது பந்து வீச்சாளர்கள் பந்தை வீசும் முன்னே யூகித்து விளையாடுவேன்.

வித்தியாசமான ஷாட்கள்

வித்தியாசமான ஷாட்கள்

உங்களுக்கு பல வித்தியாசமான ஷாட்கள் இருந்தால் மட்டுமே டி20 கிரிக்கெட்டில் ரன் சேர்க்க முடியும். பந்துவீச்சாளர்கள் தன்னுடைய ப்ளானை மாற்றிக் கொண்டு பந்து வீசினால், உங்களுக்கு அதற்கான பதில் இருக்க வேண்டும். என்னுடைய பயிற்சியாளர் ராகுல் டிராவிட் எனக்கு உறுதுணையாக இருக்கிறார். அவர் எனக்கு முழு சுதந்திரத்தை கொடுக்கிறார். களத்தில் நான் எப்படி செயல்பட வேண்டும் என்பது குறித்து அவர் எந்த மாற்றுத்தையும் சொன்னது கிடையாது. மைதானத்தில் சென்று மகிழ்ச்சியோடு விளையாடு, உனக்குத் தோன்றுவதை செய் என்று தான் ராகுல் டிராவிட் எனக்கு அறிவுரை வழங்குவார் .

நம்பிக்கையை காப்பற்றனும்

நம்பிக்கையை காப்பற்றனும்

கேப்டனும் அணியும் என்னை நம்புகிறது .அந்த நம்பிக்கையை ஒரு பேட்ஸ்மேனாக நான் காப்பாற்ற வேண்டும். டாஸ் வென்று கேப்டன் முதலில் பேட்டிங் தேர்வு செய்கிறார் என்றால் அவருடைய எதிர்பார்ப்பை நாம் தான் பேட்டிங் மூலம் பூர்த்தி செய்ய வேண்டும். தொடர்ந்து இது போன்று விளையாட வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன் என்று சூரிய குமார் யாதவ் கூறியுள்ளார். நேற்றைய ஆட்டத்தில் மட்டும் சூர்யகுமார் ஆட்டநாயகன் உள்பட 3 விருதுகளை வாங்கினார்.

Story first published: Sunday, January 8, 2023, 6:40 [IST]
Other articles published on Jan 8, 2023
English summary
Suryakumar yadav reveals his success mantra after his mind blowing century vs sl ஓ.. இது தான் அதிரடிக்கு காரணமா? சூர்யகுமார் சொன்ன வெற்றி ரகசியம்.. டிராவிட் கொடுத்த டிப்ஸ்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+