For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

காயம் அடைந்ததால் என் வாய்ப்பு போச்சு! மீண்டும் டெஸ்ட் அணியில் இடம்பிடிப்பேன் - சூர்யகுமார் நம்பிக்கை

மும்பை : பாரிஸ் : இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியில் மீண்டும் இடம் பிடிப்பேன் என்று சூரியகுமார் யாதவ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்திய அணி வரும் ஐந்து மாதத்தில் 10 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் விளையாடுகிறது. இந்த தொடருக்கு முன்பாக வரும் செப்டம்பர் 5ஆம் தேதி துலீப் கோப்பை தொடர் நடைபெறுகிறது.

இதில் சூரிய குமார்யாதவ் விளையாடுகிறார். இந்த தொடரில் சிறப்பாக செயல்பட்டு தன்னுடைய திறமையை நிரூபித்து மீண்டும் டெஸ்ட் அணிக்கு திரும்ப அவர் முயற்சி செய்து வருகிறார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள டெஸ்ட் அணியில் இடம் பிடிக்க வேண்டும் என்பதற்காக பல வீரர்கள் கடுமையாக உழைத்து இருக்கிறார்கள்.

suryakumar yadav india cricket team virat kohli

எனக்கும் டெஸ்ட் அணியில் இடம் பிடிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. நான் டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணிக்கு அறிமுகமான பிறகு எனக்கு காயம் ஏற்பட்டு விட்டது. இதனால் பல வீரர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு இந்திய அணியில் இடம் பிடித்து விட்டார்கள். அந்த வீரர்கள் தங்கள் கிடைத்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்தியிருக்கிறார்கள்.

அந்த வீரர்கள் தான் இனி டெஸ்ட் போட்டிகளில் இடம் பிடிக்க அதிக வாய்ப்பு இருக்கிறது. ஆனால் நான் மீண்டும் அணியில் இடம் பிடிப்பது எனது கையில் இல்லை. ஆனால் எனது கையில் இருப்பது உள்ளூர் டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக விளையாடி ரன்கள் சேர்க்க வேண்டும். புச்சிபாபு, துலீப் கோப்பை போன்ற தொடர்களில் நான் நன்றாக செயல்படுவேன்.

அப்படி நடந்தால் பின் என்ன நடக்கிறது என்பதை பார்க்கலாம். டெஸ்ட் கிரிக்கெட் என்பது மிகவும் சவாலான ஒன்று. பவுலர்களை விட நீங்கள் ஒரு படி மேல் இருக்க வேண்டும். டி20 கிரிக்கெட் போல் உங்களால் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆட முடியாது. அதே சமயம் ரன் அடிக்க வேண்டும் என்ற உத்வேகம் இருக்க வேண்டும்.

களத்தில் எவ்வாறு நடந்து கொள்கிறோம். ஐந்து நாட்கள் களத்தில் எப்படி செயல்படுகிறோம் என்பது முக்கியம். இதை தான் நான் மனதில் வைத்துக் கொண்டு பயிற்சியில் கவனம் செலுத்தி வருகிறேன். மனதில் பல விஷயத்தை வைத்துக் கொண்டு போட்டியில் உங்களால் ஜொலிக்க முடியாது. எனவே பயிற்சியில் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதில் கவனம் செலுத்த வேண்டும்.

நான் சிறப்பாக விளையாடி ரன்கள் சேர்த்தால் சிஎம் என் வாய்ப்புக்காக காத்துக் கொண்டிருப்பேன். அப்படி டெஸ்ட் கிரிக்கெட்டில் சொதப்பினால் மீண்டும் என்னுடைய அடிப்படை விஷயத்திற்கு சென்று மீண்டும் நான் தயாராகி வருவேன் என்று சூரியகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.

Story first published: Tuesday, August 27, 2024, 19:38 [IST]
Other articles published on Aug 27, 2024
English summary
Suryakumar yadav says He Will try to Get Place in Indian Test team காயம் அடைந்ததால் என் வாய்ப்பு போச்சு! மீண்டும் டெஸ்ட் அணியில் இடம்பிடிப்பேன் - சூர்யகுமார் நம்பிக்கை
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+