Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்திய அணியிலிருந்து நீக்கப்பட்ட சூர்யகுமார்.. மும்பை டி203யில் 36 பந்துகளில் 72 ரன்கள் குவித்து அதிரடி

மும்பை: இந்திய அணியின் கேப்டன் பதவியையும், அணியில் தனக்கான இடத்தையும் இழந்த அதிர்ச்சியில் இருந்து மீண்டு வரும் சூரியகுமார் யாதவ், தற்போது டி20 மும்பை தொடரில் தனது அதிரடியான ஆட்டத்தைத் தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறார். இந்திய டி20 அணியிலிருந்து நீக்கப்பட்டது குறித்த விமர்சனங்களுக்கு, தனது பேட்டிங் மூலம் அவர் வலுவான பதிலடி கொடுத்துள்ளார்.

சமீபத்தில் நடந்த லீக் போட்டியில், ட்ரையம்ப்ஸ் நைட்ஸ் (Triumphs Knights MNE) அணிக்காக விளையாடிய சூரியகுமார், 36 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 72 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார். வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், எம்எஸ்சி மராத்தா ராயல்ஸ் அணிக்கு எதிராக அவர் காட்டிய ஆக்ரோஷமான ஆட்டம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

ஆட்டத்தின் தொடக்கத்தில், மராத்தா ராயல்ஸ் அணியைச் சரிப்பதில் பந்துவீச்சாளர் சில்வெஸ்டர் டிசோசா முக்கியப் பங்காற்றினார். எதிரணியின் விக்கெட்டுகளை அடுத்தடுத்து வீழ்த்திய அவர், 3.5 ஓவர்களில் 21 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். இதனால் மராத்தா ராயல்ஸ் அணி 152 ரன்களுக்குள் சுருண்டது.

IND A vs SL A: வைபவ் சூர்யவன்ஷி ஏமாற்றம்.. காலை வாரிய பிராப்சிம்ரன்.. ருதுராஜ் அரைசதம்

IND A vs SL A: வைபவ் சூர்யவன்ஷி ஏமாற்றம்.. காலை வாரிய பிராப்சிம்ரன்.. ருதுராஜ் அரைசதம்

வெற்றியைத் துரத்திய ட்ரையம்ப்ஸ் நைட்ஸ் அணி, தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை இழந்து சவாலான சூழலை எதிர்கொண்டது. இருப்பினும், களமிறங்கிய சூரியகுமார், நூதன் குமார் கோயலுடன் ஜோடி சேர்ந்து நிதானமாகவும் அதே சமயம் அதிரடியாகவும் விளையாடினார். இவர்கள் சரிந்த விக்கெட்டுகளை மீட்டெடுத்து, மூன்றாவது விக்கெட்டுக்கு 103 ரன்களைச் சேர்த்தனர்.

மைதானத்தின் நாலாபுறமும் பந்தை விரட்டிய சூரியகுமார், 13 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் மொத்தம் 72 ரன்களை விளாசினார். அவருடன் நிலைத்து நின்று ஆடிய நூதன் குமார் கோயல், 42 பந்துகளில் 56 ரன்கள் எடுத்து ஆட்டத்தின் போக்கை மாற்ற உதவினார். இறுதியாக 16 ஓவர்களிலேயே இலக்கை எட்டி ட்ரையம்ப்ஸ் நைட்ஸ் அணி ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தொடர்ச்சியாக மூன்று போட்டிகளில் தோல்வியைச் சந்தித்திருந்த ட்ரையம்ப்ஸ் நைட்ஸ் அணிக்கு, இந்த வெற்றி ஒரு திருப்புமுனையாக அமைந்தது. சூரியகுமார் தனது பொறுப்பான ஆட்டத்தின் மூலம் அணியின் முதல் வெற்றியை உறுதி செய்தார். தொடரின் முந்தைய போட்டிகளில் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தாலும், சோபோ மும்பை ஃபால்கன்ஸ் அணிக்கு எதிரான முந்தைய ஆட்டத்தில் அவர் 48 ரன்கள் குவித்து ஃபார்முக்குத் திரும்பியிருந்தார்.

இந்திய தேர்வுக்குழு சமீபத்தில் மேற்கொண்ட அதிரடி மாற்றங்கள் பலரது கவனத்தை ஈர்த்தன. டி20 உலகக் கோப்பையை வென்றுகொடுத்த கேப்டனாக இருந்தபோதிலும், அணி நிர்வாகம் சூரியகுமாரைத் தலைமைப் பொறுப்பிலிருந்து விடுவித்தது. அதோடு, அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து சுற்றுப்பயணம், மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான இந்திய அணியிலிருந்தும் அவர் நீக்கப்பட்டார். 35 வயதான அவரது சமீபத்திய ஆட்டத்திறன் மற்றும் அணியின் எதிர்காலத் திட்டங்களைக் கருத்தில் கொண்டு, ஸ்ரேயாஸ் ஐயர் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

IND vs AFG: ஹர்திக் பாண்டியா உடல்தகுதியில் தேர்ச்சி.. ரோகித் பங்கேற்பது சந்தேகம்

IND vs AFG: ஹர்திக் பாண்டியா உடல்தகுதியில் தேர்ச்சி.. ரோகித் பங்கேற்பது சந்தேகம்

இந்த மாற்றம் குறித்து மனம் திறந்த சூரியகுமார், “மும்பைக்காரர் ஒருவர் இந்திய டி20 அணியை வழிநடத்தவிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். அணி வீரர்கள் அனைவரும் திறமையானவர்கள். நீங்கள் முன்வைக்கும் யோசனைகளை அவர்கள் நிச்சயம் ஏற்று சிறப்பாகச் செயல்படுத்துவார்கள். நீங்கள் நீங்களாகவே இருங்கள்” என்று கூறினார்.

Story first published: Tuesday, June 9, 2026, 13:06 [IST]
Other articles published on Jun 9, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+